ஆரணி அரசு மருத்துவமனையில் மத்திய ஊரக சுகாதார துறையினர் ஆய்வு
மத்திய ஊரக சுகாதாரத்துறையை சேர்ந்த ஆய்வாளர்கள் நேற்று ஆரணி அரசு பொது மருத்துவமனையில் திடீரென ஆய்வு செய்தனர்.
ஆரணி,
சென்னை காந்தி நகர் பகுதியில் உள்ள மக்கள் தொகை ஆராய்ச்சி கழக இணை இயக்குனர் எம்.தனபாக்கியம் மற்றும் மத்திய ஊரக சுகாதாரத்துறையை சேர்ந்த ஆய்வாளர்கள் நேற்று ஆரணி அரசு பொது மருத்துவமனையில் திடீரென ஆய்வு செய்தனர். அப்போது சுகாதார துறையினரால் மருத்துவமனைக்கு வழங்கப்பட்ட கருவிகள், பொருட்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளதா?, பயன்பாட்டிற்கு வராததற்கு என்ன காரணம், 24 மணி நேரமும் மருத்துவர்கள் இருப்பதற்கான என்னென்ன தகுதிகள் தேவை, நோயாளிகள் வருகை, உள்நோயாளிகள் எண்ணிக்கை விவரம் ஆகியவற்றை கேட்டு அறிந்தனர்.
ஆய்வின்போது மாவட்ட இணை இயக்குனர் டாக்டர் ஏழுமலை, மருத்துவ அலுவலர் டாக்டர் நந்தினி மற்றும் பலர் உடனிருந்தனர்.
Related Tags :
Next Story