சுதந்திர போராட்டத்தைப் போல் கவர்னர்களிடம் இருந்து விடுதலை பெற போராடுகிறோம், நாராயணசாமி வேதனை


சுதந்திர போராட்டத்தைப் போல் கவர்னர்களிடம் இருந்து விடுதலை பெற போராடுகிறோம், நாராயணசாமி வேதனை
x
தினத்தந்தி 28 Jun 2018 5:00 AM IST (Updated: 28 Jun 2018 2:47 AM IST)
t-max-icont-min-icon

சுதந்திர போராட்டத்தைப் போல் கவர்னர் களிடம் இருந்து விடுதலை பெற போராடி வருகிறோம் என்று முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறினார்.

காரைக்கால்,

காரைக்கால் அம்மையார் மாங்கனித் திருவிழாவின் 3-ம் நாள் நிகழ்ச்சியில் முதல்- அமைச்சர் நாராயணசாமி கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

புதுச்சேரியில் பெண்கள் மிகவும் பாதுகாப்பாக இருக்கிறார்கள் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. பெண்களின் பாதுகாப்பு பற்றி காங்கிரசாரிடம் பிரதமர் நரேந்திர மோடி கற்றுக்கொள்ள வேண்டும். நள்ளிரவு 2 மணிக்கு கூட பெண்கள் தனியாக நகைகள் அணிந்து பாதுகாப்பாக நடந்து செல்லும் நிலை புதுச்சேரியில் உள்ளது. முன்னாள் முதல்-அமைச்சர் ரங்கசாமி ஆட்சியில் கொலை, கொள்ளை, வழிப்பறி, வீடு அபகரிப்பு என சட்டம்-ஒழுங்கு சீர்கெட்டு இருந்தது. காங்கிரஸ் ஆட்சியில் சட்டம் - ஒழுங்கு சரியாக உள்ளது.

முதல்-அமைச்சரையோ, அமைச்சர்களையோ கலந்து ஆலோசிக்காமல் கவர்னர் கிரண்பெடி நேரடியாக கள ஆய்வுக்கு செல்லக்கூடாது. புதுச்சேரியில் ஆரம்பித்த இந்த நோய் தற்போது தமிழகத்திலும் பரவியுள்ளது. கவர்னர்களை வைத்து மாநில அரசுகளை மோடி அரசு மிரட்டுகிறது. சுதந்திர போராட்டத்தைபோல் தற்போதுள்ள கவர்னர்களிடம் இருந்து விடுதலை பெற போராடி வருகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story