பணி நிரந்தரம் செய்யக்கோரி சேலத்தில் மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள் உண்ணாவிரதம்
பணி நிரந்தரம் செய்யக்கோரி சேலத்தில் மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள் உண்ணாவிரதம் இருந்தனர்.
சேலம்,
தமிழ்நாடு மின்சார வாரியத்தில் பணிபுரியும் ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், அமைச்சர் முன்னிலையில் நடந்த ஒப்பந்தப்படி தினக்கூலி ரூ.380-ஐ வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு (சி.ஐ.டி.யு.) சார்பில் சேலத்தில் நேற்று உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. சேலம் கலெக்டர் அலுவலகம் முன்பு நடந்த இந்த உண்ணாவிரதத்திற்கு சேலம் மின்பகிர்மான வட்ட தலைவர் ரகுபதி தலைமை தாங்கினார். சேலம் கிளை செயலாளர் கருப்பண்ணன், சேலம் மாவட்ட சி.ஐ.டி.யு. தலைவர் பன்னீர்செல்வம் உள்பட மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.
இந்த உண்ணாவிரதத்தில் ஒப்பந்த தொழிலாளர்களை அடையாளம் கண்டு பணிநிரந்தரம் செய்ய வேண்டும், சிவில் பிரிவில் பணிபுரிந்து வரும் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு ரூ.380-ஐ வழங்க வேண்டும், ஒப்பந்த தொழிலாளர்கள் அனைவருக்கும் அடையாள அட்டை வழங்க வேண்டும், என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
இதுகுறித்து அமைப்பு நிர்வாகி ரகுபதி கூறுகையில், தமிழ்நாடு மின்சார வாரியத்தில் 11 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ஒப்பந்த தொழிலாளர்களாக பணியாற்றி வருகிறார்கள். இவர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று அரசிடம் பலமுறை கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, அனைத்து ஒப்பந்த தொழிலாளர்களையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும். மின்துறை அமைச்சர் முன்னிலையில் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு தினக்கூலியாக ரூ.380-ஐ வழங்கப்படும் என்ற ஒப்பந்தத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும் உச்சநீதிமன்றத்தின் சமவேலைக்கு சம ஊதியம் என்ற தீர்ப்பை அமலாக்க வேண்டும். ஒப்பந்த தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கையை நிறைவேற்றாவிட்டால் போராட்டம் தொடரும், என்றார்.

Related Tags :
Next Story