மாரண்டஅள்ளியில் திருநங்கை மர்ம சாவு போலீசார் விசாரணை


மாரண்டஅள்ளியில் திருநங்கை மர்ம சாவு போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 28 Jun 2018 3:45 AM IST (Updated: 28 Jun 2018 3:03 AM IST)
t-max-icont-min-icon

மாரண்டஅள்ளியில் திருநங்கை மர்மமான முறையில் தூக்கில் பிணமாக தொங்கினார். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பாலக்கோடு,

தர்மபுரி மாவட்டம் மாரண்ட அள்ளி புதுத்தெருவில் வசித்து வந்தவர் அருண்குமார் என்கிற தனுஸ்ரீ (வயது 25). திருநங்கை. இவர் மேலும் 2 திருநங்கைகளுடன் அப்பகுதியில் வசித்து வந்தார். இந்த நிலையில் நேற்று அதே பகுதியில் உள்ள ஒரு மரத்தில் தனுஸ்ரீ தூக்கில் பிணமாக தொங்கினார். இதைப் பார்த்து அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் இது குறித்து மாரண்டஅள்ளி போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் அவர்கள் தனுஸ்ரீயின் உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர்.

போலீசார் விசாரணை

அப்போது அவருடைய உடலில் காயம் இருந்ததாக போலீசார் தெரிவித்தனர். பின்னர் உடலை பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தனுஸ்ரீ தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு காரணமா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர். திருநங்கை மர்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

Next Story