கன்னியாகுமரி கடலில் தத்தளித்தவர் மீட்பு கடலோர பாதுகாப்பு குழும போலீசார் நடவடிக்கை
கன்னியாகுமரியில் முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கிலித்துறையில் நேற்று அதிகாலை 5 மணியளவில் ஏராளமான சுற்றுலா பயணிகள் சூரியோதயம் பார்க்க திரண்டனர்.
கன்னியாகுமரி,
கன்னியாகுமரியில் முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கிலித்துறையில் நேற்று அதிகாலை 5 மணியளவில் ஏராளமான சுற்றுலா பயணிகள் சூரியோதயம் பார்க்க திரண்டனர். அப்போது, கடற்கரையில் திரண்ட பயணிகள் விவேகானந்தர் மண்டபம் -திருவள்ளுவர் சிலைக்கு இடையிலான கடற்பகுதியில் ஒருவர் தத்தளித்து கொண்டிருப்பதை கண்டனர். உடனே அவர்கள், இதுபற்றி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த கடலோர பாதுகாப்பு குழும போலீஸ் இன்ஸ்பெக்டர் சைரஸ், சப்-இன்ஸ்பெக்டர்கள் நாகராஜன், சுடலைமணி, ஏட்டு நீலமணி ஆகியோர் அங்கு விரைந்து வந்தனர்.
அவர்கள் கடலில் தத்தளித்து கொண்டிருந்த நபரை மீட்க முயற்சி மேற்கொண்டனர். அதற்குள் அந்த நபர் அங்கிருந்த பாறையின் மீது ஏறினார். உடனே போலீசார் அங்கு சென்று அந்த நபரை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர்.
பின்னர், அவரிடம் நடத்திய விசாரணையில், அவர் நெல்லை மாவட்டம் களக்காடு பகுதியை சேர்ந்த கணேசன் (வயது 43) என்பதும், அவருக்கு 2 மனைவியும், 7 குழந்தைகளும் இருப்பதும் தெரியவந்தது. மேலும், அவருக்கு மனநலம் பாதிக்கப்பட்டு இருப்பதையும் போலீசார் அறிந்து கொண்டனர். அதைதொடர்ந்து கணேசனின் உறவினர்களுக்கு போலீசார் தகவல் கொடுத்தனர்.
இந்த சம்பவம் கன்னியாகுமரியில் அதிகாலையில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Tags :
Next Story