திருவட்டார் கல்வி மாவட்ட அலுவலகத்தை இடமாற்றம் செய்ததை கண்டித்து ஆர்ப்பாட்டம்
திருவட்டார் கல்வி மாவட்ட அலுவலகத்தை இடமாற்றம் செய்ததை கண்டித்து அனைத்து ஆசிரியர் இயக்கங்கள் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
திருவட்டார்,
குமரி மாவட்டத்தில் நாகர்கோவில், தக்கலை, குழித்துறை ஆகிய 3 கல்வி மாவட்டங்கள் உள்ளன. இந்த நிலையில் 4-வது கல்வி மாவட்டமாக திருவட்டார் உதயமானது. இதற்கான அலுவலகம் திருவட்டார் அரசு உயர்நிலைப்பள்ளி கட்டிடத்தில் இயங்கி வந்தது.
இந்த நிலையில் திருவட்டார் கல்வி மாவட்ட அலுவலகம் இடமாற்றம் செய்யப்பட்டு மார்த்தாண்டம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் அமைக்கப்பட்டு உள்ளது.
திருவட்டார் கல்வி மாவட்ட அலுவலக இடமாற்றத்தை கண்டித்து அனைத்து ஆசிரியர் இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பில் திருவட்டாரில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு ஆசிரியர் கூட்டமைப்பின் மாவட்ட செயலாளர் சேம் பிரின்ஸ் குமார் தலைமை தாங்கினார். அவர் பேசும் போது, ‘திருவட்டாரில் கல்வி மாவட்டம் உதயமாகி உள்ள நிலையில் கோதையாறு, பேச்சிப்பாறை உள்ளிட்ட தொலைதூர பகுதிகளில் உள்ள பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இந்த நிலையில் திருவட்டார் கல்வி மாவட்ட அலுவலகத்தை மார்த்தாண்டம் அரசு ஆண்கள் பள்ளி வளாகத்துக்கு மாற்றி உள்ளனர். அங்கு ஏற்கனவே ஒரு கல்வி மாவட்ட அலுவலகம் இயங்கி வருகிறது. எனவே திருவட்டார் கல்வி மாவட்ட அலுவலகம் திருவட்டாரிலேயே இயங்க வேண்டும். இல்லாவிட்டால் பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்தப்படும்‘ என்று குறிப்பிட்டார்.
இதில் தலைவர் நாகப்பன், பொதுக்குழு உறுப்பினர்கள் ரமேஷ், சிவசந்திரன், திவாகரன்பிள்ளை, முருகானந்தம், விஜயகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story