ரேஷன் பொருட்கள் தட்டுப்பாடின்றி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்
ரேஷன் பொருட்கள் தட்டுப்பாடின்றி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கோட்டூர்,
கோட்டூரில் தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கத்தின் திருவாரூர் மாவட்ட நிர்வாகக்குழு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் வீராச்சாமி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் ஞானமோகன் முன்னிலை வகித்தார். இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் திருவாரூர் மாவட்ட செயலாளர் சிவபுண்ணியம் கலந்து கொண்டு பேசினார். கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தை மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் நிபந்தனையின்றி செயல்படுத்த வேண்டும். இந்த வேலை திட்டத்தை நகராட்சி, மற்றும் பேரூராட்சி பகுதிகளுக்கும் விரிவுபடுத்திட வேண்டும்.
மேலும் விவசாய தொழிலாளர்களுக்கு நிரந்தர வேலை வாய்ப்பை உருவாக்க வலியுறுத்தி வருகிற ஆகஸ்டு மாதம் 16, 17-ந் தேதிகளில் நீடாமங்கலத்தில் மாவட்ட மாநாடு நடத்த வேண்டும்.
அரசு நியாய விலைக்கடைகளில் குடும்ப அட்டைக்கு வழங்கி வரும் அரிசி, சீனியை தவிர கோதுமை, பருப்பு, எண்ணெய் போன்ற அத்தியாவசிய பொருட்கள் வழங்குவதில் கடும் தட்டுப்பாடு நிலவுகிறது. இதனால் குடும்ப அட்டை உள்ள ஏழை, எளிய மக்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். ஆதலால் அனைவருக்கும் ரேஷன் பொருட்கள் தட்டுப்பாடின்றி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும் பொதுவினியோக திட்டத்தின் மூலம் வழங்கப்பட்டு வரும் அத்தியவாசிய பொருட்களின் மானியத்தை ரத்து செய்யும் வகையில் குடும்ப அட்டைதாரர்களை முன்னுரிமை, முன்னுரிமை அல்லாதோர் என்று வகைப்படுத்தியுள்ளது. இதை மாற்றி பழைய முறைப்படி அனைவருக்கும் ரேஷன் பொருட்கள் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.
இதில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் மாரிமுத்து, ஒன்றிய துணைச்செயலாளர் செந்தில்நாதன், விவசாய தொழிலாளர் சங்கத்தின் மாவட்டக்குழு நிர்வாகிகள் ஜெயராமன், நேதாஜி, மகேந்திரன், குணசேகரன், நாகராஜன், சிவபிரகாசம், மாரியப்பன், அம்சவள்ளி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story