வருமானவரி ஆவணங்கள் ‘இ-பைலிங்’ கணக்குகள் மூலம் பராமரிக்கப்படும் அதிகாரி தகவல்
வருமானவரி ஆவணங்கள் ‘இ-பைலிங்’ கணக்குகள் மூலம் பராமரிக்கப்படும் என திருச்சி வருமானவரித்துறை அதிகாரி சுரேந்திரநாத் தெரிவித்து உள்ளார்.
கரூர்,
கரூர் மாவட்ட வருமானவரித்துறை அலுவலகம் சார்பில், வருமான வரி சட்டத்தில் தற்போது புதிதாக கொண்டு வரப்பட்டுள்ள திருத்தங்கள் குறித்த விளக்க கருத்தரங்கம் நேற்று நடந்தது. வருமானவரித்துறை அதிகாரி சுந்தரபாண்டியன் வரவேற்று பேசினார். இதில் திருச்சி வருமானவரித்துறை துணை ஆணையர் சுரேந்திரநாத் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
அப்போது அவர் கூறியதாவது:-
வருமான வரித்துறையை நவீனமயமாக்கும் விதமாக பணிகள் அனைத்தும் ஆவணங்களின்றி இணைய தளத்திற்கு மாற்றப்படுகிறது. அந்த வகையில் வருமானவரி செலுத்துபவர்களுக்கு இணையதளம் மூலமாக ‘இ-பைலிங்’ கணக்குகள் தொடங்கப்படும். இனி வருங்காலங்களில் வருமானவரி அலுவலகத்தின் மூலம் கிடைக்கபெறும் சேவைகள் அனைத்தும் இதன் மூலமே நிகழும்.
இணையதளத்தில் ஆவணங்கள் இனி வருமான வரி ஆவணங்கள் அனைத்தும் பேப்பர் கட்டுகளாக அல்லாமல் அனைத்தும் இணையதளத்தில் பதிவு செய்யப்படும். இதன் மூலம் அலுவலகத்திற்கு செல்லும் அலைச்சல் மிச்சமாகும். எனவே, தொழில் நிறுவனங்களின் ஆடிட்டர்கள் இந்த சட்ட திட்டங்களை நன்கு அறிந்து கொண்டு அதன் வழியே கணக்கு விவரங்களை தாக்கல் செய்ய வேண்டும்.
மேலும், சேவை பெறும் சட்ட விதியை மாற்றி குளறுபடியுடன் விண்ணப்பித்தால் அதற்கு விளக்கம் கேட்கப்படும். இந்த ஆண்டு முதல் அனைத்து வங்கி கணக்குகளையும் வருமானவரி படிவத்தில் தாக்கல் செய்ய வேண்டும். இந்த ஆண்டு நடந்த சொத்து பரிவர்த்தனையையும் காண்பிக்க வேண்டும். வருமான வரி செலுத்தும் முறை கடந்த ஆண்டு முதல் மாற்றி அமைக்கப்பட்டு உள்ளது. அந்த வகையில் ஜூன், செப்டம்பர், டிசம்பர், மார்ச் மாதங்களில் 15 தேதிகளுக்கு முன்னதாக செலுத்திட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
அதனை தொடர்ந்து கருத்தரங்கில் கலந்து கொண்ட டெக்ஸ்டைல் உரிமையாளர்கள், சாயப்பட்டறை உரிமையாளர்கள், நூற்பாலை உரிமையாளர்கள், கொசுவலை ஏற்றுமதியாளர்கள் மற்றும் நிறுவன ஆடிட்டர்கள் உள்ளிட்டோர் தங்களது சந்தேகங்களை கேட்டனர். அப்போது ஒரு நபரிடமிருந்து ஒரு விற்பனை பட்டியலுக்கோ, அல்லது பல விற்பனை பட்டியலுக்கோ ரூ.2 லட்சத்திற்கு மேல் ரொக்கமாக பெற்றால் அபராதம் செலுத்துவது உள்ளிட்ட சட்ட விதிகளுக்கு அதிகாரிகள் விளக்கம் அளித்து பேசினர்.
கருத்தரங்கில், வருமானவரித்துறை அதிகாரிகள் பாலையா, கார்த்திக், குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக வருமானவரித்துறை இணையதளம் வாயிலாக பான் நம்பர், ஆதார் கார்டு உள்ளிட்டவற்றை பதிவு செய்து இ-பைலிங் கணக்குகளை தொடங்குவது எப்படி? என்பது குறித்து கணினி தொடுதிரையில் செயல் விளக்கம் அளிக்கப்பட்டது.

Related Tags :
Next Story