கூட்டணி ஆட்சிக்கு எதிராக பேசுவதை சகித்துக்கொள்ள முடியாது: சித்தராமையாவுக்கு மந்திரி டி.கே.சிவக்குமார் மறைமுக எச்சரிக்கை
கூட்டணி ஆட்சிக்கு எதிராக பேசுவதை சகித்துக்கொள்ள முடியாது என்று சித்தராமையாவுக்கு மந்திரி டி.கே.சிவக்குமார் மறைமுகமாக எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பெங்களூரு,
கர்நாடக நீர்ப்பாசனத்துறை மந்திரி டி.கே.சிவக்குமார் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
சித்தராமையா மற்றும் சில எம்.எல்.ஏ.க்கள் இடையே நடந்த உரையாடலை யாரோ விஷமிகள் வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளனர். அந்த வீடியோவில் உள்ள சித்தராமையாவின் இந்த பேச்சு அதிகாரப்பூர்வமற்றது. கூட்டணி குறித்து நான் உள்பட யாரும் பகிரங்கமாக கருத்து தெரிவிக்கக்கூடாது. அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மற்றும் மேலிட பொறுப்பாளர் வேணுகோபால் ஆகியோரின் கருத்துகளே இறுதியானது.
அவர்களை தவிர்த்து வேறு யாரும் கட்சி அல்லது ஆட்சிக்கு எதிராக கருத்து தெரிவித்தால் அதை சகித்துக்கொள்ள முடியாது. எவ்வளவு பெரிய தலைவர்களுக்கும் இது பொருந்தும். இந்த கூட்டணி 5 ஆண்டுகள் நீடிக்கும் என்று நாங்கள் கையெழுத்து போட்டு கொடுத்துள்ளோம். இதற்கு எதிராக யாரும் கருத்து தெரிவிப்பது சரியல்ல.
அரசின் முடிவுகள் குறித்து ராகுல் காந்தி விவாதித்து இருக்கிறார். நாங்கள் வெறும் 37 தொகுதிகளை மனதில் வைத்து செயல்படவில்லை. 224 தொகுதிகளையும் கவனத்தில் கொண்டு பணியாற்றுகிறோம். நாடாளுமன்ற தேர்தலில் மண்டியாவில் காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம்(எஸ்) கூட்டணி அமைய சாத்தியம் இல்லை என்று செலுவராயசாமி கூறி இருக்கிறார். இந்த விவகாரத்தில் தனிப்பட்ட நபரின் கருத்து முக்கியம் அல்ல. கட்சியின் முடிவு தான் முக்கியம்.
அரசு அதிகாரிகள் பணி இடமாற்றத்தில் எந்த பிரச்சினையும் இல்லை. காங்கிரசாரை கேட்டு தான் அதிகாரிகளை குமாரசாமி பணி இடமாற்றம் செய்து கொடுத்துள்ளார். வருகிற 5-ந் தேதி கர்நாடக பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. அன்றைய தினம் எனக்கு ஏற்கனவே ஒரு முடிவு செய்யப்பட்ட நிகழ்ச்சி ஒன்று உள்ளது. அதில் அவசியம் கலந்துகொள்ள வேண்டியுள்ளது. இதனால் அன்று நடைபெறும் சட்டசபை கூட்டத்தில் பங்கேற்க முடியாத நிலை உள்ளது.
அதனால் பட்ஜெட் தினத்தன்று நான் சட்டசபைக்கு வராமல் இருப்பதற்கு வேறு அர்த்தம் கற்பிக்க வேண்டாம். தேவையற்ற வதந்திகளை பரப்ப வேண்டாம். எனது சொந்த நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு முடிந்தவரை 5-ந் தேதி பட்ஜெட் கூட்டத்திற்கு வர முயற்சி செய்வேன். முன்னதாக 2-ந் தேதி தொடங்கும் சட்டசபையில் நடைபெறும் கூட்டுக் கூட்டத்தில் கலந்துகொள்வேன். இவ்வாறு மந்திரி டி.கே.சிவக்குமார் கூறினார்.
முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா தான் 5 ஆண்டுகள் கூட்டணி ஆட்சி நீடிக்காது என்று கூறியிருந்தார். இந்த நிலையில் கூட்டணி ஆட்சிக்கு எதிராக பேசுவதை சகித்துக்கொள்ள முடியாது என்று சித்தராமையாவை மறைமுகமாக மந்திரி டி.கே.சிவக்குமார் எச்சரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Tags :
Next Story