முல்லைப்பெரியாற்றில் இருந்து கூடுதல் தண்ணீர் திறப்பு: சிறுபுனல் நீர்மின் நிலையங்களில் மின் உற்பத்தி தொடங்கியது


முல்லைப்பெரியாற்றில் இருந்து கூடுதல் தண்ணீர் திறப்பு: சிறுபுனல் நீர்மின் நிலையங்களில் மின் உற்பத்தி தொடங்கியது
x
தினத்தந்தி 28 Jun 2018 4:45 AM IST (Updated: 28 Jun 2018 3:42 AM IST)
t-max-icont-min-icon

முல்லைப்பெரியாற்றில் இருந்து கூடுதல் தண்ணீர் திறந்து விடப்பட்டதால் சிறுபுனல் நீர்் மின் நிலையங்களில் மின் உற்பத்தி தொடங்கியுள்ளது.

கூடலூர்,

கூடலூர் 21-வது வார்டு பகுதியில் லோயர்கேம்ப் நீர் மின் உற்பத்தி நிலையம் செயல்பட்டு வருகிறது. கடந்த 1959-ம் ஆண்டு ரூ.7 கோடி செலவில் இந்த நீர் மின் நிலையம் அமைக்கப்பட்டு அன்றைய முதல்-அமைச்சர் காமராஜரால் திறந்து வைக்கப்பட்டது. இங்கு 4 ஜெனரேட்டர்கள் மூலம் 140 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கப்படுகிறது. தற்போது 4 ஜெனரேட்டர்களும் புதிதாக அமைக்கப்பட்டு அதன் மூலம் 168 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இது தவிர சுருளியாறு நீர்மின் நிலையம் அமைக்கப்பட்டு 1976-ம் ஆண்டு அன்றைய முதல் அமைச்சர் எம்.ஜி.ஆர் தொடங்கி வைத்தார். இரவங்கலாறு அணையில் இருந்து தண்ணீர்் கொண்டு வரப்பட்டு ஒரு ஜெனரேட்டர் மூலம் 35 மெகாவாட் மின்சாரம் இங்கு உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில் கடந்த 2004-ம் ஆண்டு முல்லைப் பெரியாற்றின் குறுக்கே சிறிய அளவிலான நீர்மின் நிலையங்கள் அமைக்க முடிவு செய்யப்பட்டு அன்றைய முதல்-அமைச்சர் ஜெயலலிதா ரூ.19 கோடி நிதி ஒதுக்கினார்.

அதன்படி குருவனூத்து, வெட்டுக்காடு, குள்ளப்பகவுண்டன் பட்டி, காஞ்சிமரத்துறை ஆகிய 4 இடங்களில் சிறுபுனல் நீர்்மின் நிலையங்கள் அமைக் கப்பட்டது இவற்றில் குருவனூத்து, வெட்டுக்காடு, குள்ளப்பகவுண்டன்பட்டி ஆகிய 3 இடங்களில் 2 ஜெனரேட்டர்கள் மூலம் 6 மெகாவாட் மின்சாரமும், காஞ்சிமரத்துறையில் 2 ஜெனரேட்டர்கள் மூலம் 2½ மெகாவாட் மின்சாரமும் தயாரிக்கப்பட்டு வருகிறது. தற்போது முல்லைப் பெரியாற்றில் இருந்து கூடுதல் தண்ணீர் திறந்து விடப்பட்டு உள்ளதால் இந்த சிறுபுனல் நீர்்மின் நிலையங்களில் மின் உற்பத்தி தொடங்கி உள்ளது. இதனால் அரசுக்கு கூடுதல் வருவாய் ஏற்பட்டுள்ளது. அதே நேரத்தில் லோயர்கேம்ப் நீர்மின் உற்பத்தி நிலையத்தில் 168 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. 

Next Story