கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒருங்கிணைந்த மீன்பிடி துறைமுகம்: சட்டசபையில் அமைச்சர் ஜெயக்குமார் அறிவிப்பு
கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒருங்கிணைந்த மீன்பிடி துறைமுகம் உருவாக்கப்படும் என்று சட்டசபையில் மீன்வளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் அறிவித்துள்ளார்.
சென்னை,

தமிழக சட்டசபையில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையின் மானியக் கோரிக்கை மீது எம்.எல்.ஏ.க்கள் நேற்று விவாதம் செய்தனர். அதில் கலந்துகொண்டு காங்கிரஸ் எம்.எல்.ஏ. (கிள்ளியூர்) ராஜேஷ்குமார் பேசியதும், அமைச்சர்கள் குறுக்கிட்டு அளித்த பதிலும் வருமாறு:-
ராஜேஷ்குமார்:- ஒகி புயல் பற்றி உரிய நேரத்தில் தகவல் தரப்பட்டு, உரிய நேரத்தில் மீட்புப் பணி நடைபெற்றிருந்தால் பல சேதங்களை தவிர்த்திருக்கலாம். அங்கு ஏற்பட்ட சேதங்களுக்காக மத்திய அரசு ரூ.133 கோடியை மட்டுமே வழங்கியது. கூடுதல் நிதிக்காக வைத்த கோரிக்கைக்கு செவிசாய்க்கவில்லை.
அமைச்சர் ஜெயக்குமார்:- கன்னியாகுமரி மாவட்ட மீனவர்கள், ஆழ்கடல் மீன்பிடிப்பில் வல்லவர்கள். 200 கடல்மைல் தூரத்துக்குச் சென்று பல நாட்கள் கடலுக்குள் தங்கி இருந்து மீன்பிடிப்பார்கள். அவர்களுக்குத்தான் ஒகி புயல் பற்றிய தகவல்கள் சென்றடையவில்லை.
மற்றபடி, தினமும் கடலோரப் பகுதியில் மீன்பிடிப்பவர்களுக்கு உரிய நேரத்தில் தகவல் அனுப்பப்பட்டு மீட்கப்பட்டுவிட்டனர். ஒகி புயலுக்கு 27 மீனவர்கள் பலியாகிவிட்டனர். 177 மீனவர்கள் காணாமல் போய்விட்டனர்.
இவர்களின் குடும்பத்தினருக்கு வேலை வாய்ப்புக்கான பணி ஆணை சில தினங்களில் வழங்கப்படவுள்ளது.
ராஜேஷ்குமார்:- மீனவர்களை தவிர தரையில் வசித்த 16 பேர் ஒகி புயலுக்கு பலியாகிவிட்டனர். அவர்கள் குடும்பத்துக்கும் நிவாரணம் வழங்கப்பட வேண்டும்.
பிச்சாண்டி (தி.மு.க.):- அமெரிக்கா போன்ற வெளிநாடுகளில் இயற்கை பேரிடருக்கு மிகுந்த முக்கியத்துவம் அளித்து, தினமும் டி.வி., ரேடியோ, எப்.எம். போன்றவற்றில் தொடர்ந்து வானிலை தொடர்பான தகவல்களை அளித்துக் கொண்டிருக்கின்றனர். அதுபோல இங்கும் தினமும் வானிலைத் தகவல்களைத் தரவேண்டும்.
அமைச்சர் உதயகுமார்:- நமது மாநிலத்திலும் பேரிடர் மேலாண்மைக்கான தனி துறை உள்ளது. 13 கடலோர மாவட்டங்களிலும் வட்ட அளவில் தகவல்களைக் கொண்டு சேர்க்கப்பட்டு வருகிறது. கடலுக்குள் தங்கியிருந்து மீன்பிடிக்கும் மீனவர்களிடம் தகவல்களை சேர்க்க முடியவில்லை.
அதை சீர் செய்ய பேரிடர் மீட்புத் திட்டத்தை நவீன முறையில் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இன்பதுரை (அ.தி.மு.க.):- கடல் சீற்றம் போன்ற தகவல்கள் வட்டார அளவில் வந்து சேரும்போது, கடற்கரை கிராமங்களில் உள்ள தேவாலயங்கள், ஆலயங்களில் இருக்கிற கூம்பு வடிவ ஒலிபெருக்கி மூலம் அந்த செய்தியை சொல்லும் வழக்கம் கடந்த காலங்களில் இருந்தது.
தற்போது சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பின்படி கூம்புவடிவ ஒலி பெருக்கியை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. இதனால் மீனவர்களுக்கு தகவல்களை அறிவிப்பதில் தாமதம் ஏற்படுகிறது.
எனவே கடற்கரை கிராமங்களுக்கு மட்டும் இந்த விதியைத் தளர்த்தி பேரிடர் மேலாண்மை குறித்த தகவல்களை மீனவர்களுக்கு அறிவிக்கிற வகையில் விதிவிலக்கை அரசு பெற்றுத் தரவேண்டும்.
அமைச்சர் ஜெயக்குமார்:- கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒருங்கிணைந்த மீன்பிடி துறைமுகத்தை உருவாக்குவதற்கான விரிவான திட்ட அறிக்கையை தயாரிக்கும் பணிக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அந்த துறைமுகம் எந்த இடத்தில் அமையும் என்பதை இப்போது அறிவிக்கமாட்டேன்.
அந்த மாவட்டத்தில் ரூ.112 கோடி செலவில் கடலரிப்பு தடுப்புக்கான திட்டங்கள் நிறைவேற்றப்படும்.
ராஜேஷ்குமார்:- ஒரு நபர் ரேஷன் அட்டைகளை அரசு ரத்து செய்துவிட்டது. அதை திரும்ப வழங்க வேண்டும்.
அமைச்சர் காமராஜ்:- தமிழகத்தில் மொத்தம் 19.85 லட்சம் ஒரு நபர் ரேஷன் அட்டைகள் உள்ளன. ஒரே குடும்பத்தில் உள்ளவருக்கு ஒரு நபர் ரேஷன் அட்டை இருப்பதாக புகார்கள் வந்தன.
அதனடிப்படையில் ஆய்வு நடத்தப்பட்டது. குடும்பத்துடன் இணைந்து தனி சமையல் செய்யாத நிலையில், பல ஒருநபர் ரேஷன் அட்டைகள் ரத்து செய்யப்பட்டன. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 24 ஆயிரத்து 600 ஒரு நபர் ரேஷன் அட்டைகளில் 3 ஆயிரத்து 315 அட்டைகள் மட்டுமே இந்த காரணத்துக்காக நீக்கப்பட்டுள்ளன.
அமைச்சர் உதயகுமார்:- ஒகி புயலில் உயிர் இழந்த மீனவர்களின் குடும்பத்தினரைப்போல, தரையில் உயிர் இழந்த 16 பேரின் குடும்பங்களுக்கும் நிவாரணம் வழங்குவது பற்றி பரிசீலனை செய்யப்படும்.
இவ்வாறு விவாதம் நடந்தது.

Related Tags :
Next Story