வார்டு வாரியாக தகவல் கிடைக்கும்: சென்னை மாவட்டத்துக்கு வெள்ள முன்னறிவிப்பு திட்டம் சட்டசபையில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் அறிவிப்பு
சென்னை மாவட்டத்தில் வெள்ள முன்னறிவிப்பு திட்டம் செயல்படுத்தப்படும் என்று சட்டசபையில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் அறிவித்துள்ளார்.
சென்னை,
சென்னை மாவட்டத்தில் வெள்ள முன்னறிவிப்பு திட்டம் வட்டத்தில் செயல்படுத்தப்படும் என்று சட்டசபையில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் அறிவித்துள்ளார்.
தமிழக சட்டசபையில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறைக்கான மானியக் கோரிக்கை மீது எம்.எல்.ஏ.க்கள் நேற்று விவாதித்தனர். அவர்களுக்கு பதிலளித்து அந்த துறையின் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசினார். பின்னர் அவர் வெளியிட்ட புதிய அறிவிப்புகள் வருமாறு:-
* 423 கிராம நிர்வாக அலுவலர்களுக்கு மடிக்கணினி, அச்சுப்பொறி, டேட்டா கார்டு வழங்கப்படும்.
* வருவாய் அலுவலர்கள் 1,863 பேருக்கு இணையதள வசதியுடன் கூடிய சிம்கார்டு வழங்கப்படும்.
* பேரிடர் மேலாண்மைத் துறைக்கு தகவல் மேலாண்மை அமைப்பு ஏற்படுத்தப்படும்.
* சமூகப் பாதுகாப்புத் திட்ட பிரிவு ஆவணங்கள் அனைத்தும் கணினிமயமாக்கப்படும்.
* கால்நடைகளுக்கு சேதம் ஏற்படுவதைத் தடுக்க, புனேயில் உள்ள இந்திய வானிலை மையத்தின் உதவியுடன், இடி, மின்னல் குறித்த முன்னெச்சரிக்கை வழங்கும் முன்னோடித் திட்டம் 2018-19-ம் ஆண்டில் செயல்படுத்தப்படும்.
* தீபாவளி பட்டாசுகள் விற்பனை செய்ய, பண்டிகைக்கு 30 நாட்களுக்கு முன்பு தற்காலிக உரிமத்துக்காக விண்ணப்பங்களை இணைய வழியாக சமர்ப்பிக்க சர்வர் உருவாக்கப்படும். எனவே வியாபாரிகள் தீபாவளிக்கு 2 மாதங்களுக்கு முன்பாக ஆகஸ்டு 15-ந் தேதிக்குள்ளாக இணையதளம் மூலம் மனு அளிக்க வேண்டும்.
* வெடிமருந்து பொருட்களை சேமிக்க உரிமம் மற்றும் பெட்ரோலிய சட்டம் தொடர்பான தடையில்லா சான்று பெற மின்னணு மூலம் விண்ணப்பிக்கலாம்.
* ஆதரவற்ற விதவையர், ஆதரவற்ற குழந்தைகள், சான்றிதழ் மற்றும் துயர் துடைப்பு திட்டங்களுக்கான நிவாரண நிதி உதவி பெற இசேவை மையம் மூலம் விண்ணப்பிக்கலாம்.
* மாற்றுத்திறனாளிகளின் தேவையை பூர்த்தி செய்ய சிறப்பு குறைதீர் கூட்டம் நடத்தப்படும்.
* பேரிடர் உதவி படைகள் உருவாக்கப்படும்.
* மீனவர்களுக்கு முழுமையான முன்னெச்சரிக்கை தகவல் சாதனங்கள் (செயற்கைகோள் மூலம் செயல்படக் கூடியவை) வழங்கப்படும்.
* சென்னை மாவட்டத்துக்கான வெள்ள முன்னறிவிப்பு திட்டம், வரவுள்ள வடகிழக்கு பருவமழை காலத்தில் உருவாக்கப்பட்டு செயல்பாட்டுக்கு வரும். நில அமைப்பின் தகவல், வெள்ள பாதிப்புக்கு உள்ளாகும் பகுதிகள் தகவல், முப்பரிமாண புவியியல் தகவல் அமைப்பின் காட்சித் தொகுப்பு, நிகழ்நிலை தரவு மையத் தொகுப்பு, மக்கள் கூறும் வெள்ளம் குறித்த தகவல் தொகுப்பு ஆகியவற்றின் மூலம் வெள்ள மட்ட அளவு கிடைத்த ஒரு மணிநேரத்தில் வார்டு வாரியாக தகவல் வழங்கப்படும்.
* 100 குறுவட்ட அளவர்களுக்கு அலுவலகத்துடன் கூடிய குடியிருப்புகள் கட்டப்படும். கிராம நிர்வாக அலுவலர்களின் மாறுதல் கோரிக்கைகளை பரிசீலனை செய்ய செயலி உருவாக்கப்படும்.
இவ்வாறு அவர் அறிவிப்புகளை வெளியிட்டார்.

Related Tags :
Next Story