பா.ஜனதா ஆட்சியில் பெட்ரோல், டீசல் விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்வு, தி.மு.க. மாவட்ட செயலாளர் குற்றச்சாட்டு


பா.ஜனதா ஆட்சியில் பெட்ரோல், டீசல் விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்வு, தி.மு.க. மாவட்ட செயலாளர் குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 28 Jun 2018 4:30 AM IST (Updated: 28 Jun 2018 4:28 AM IST)
t-max-icont-min-icon

பா.ஜனதா ஆட்சியில் பெட்ரோல், டீசல் விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்துள்ளதாக உச்சிப்புளியில் நடைபெற்ற தி.மு.க. பொதுக்கூட்டத்தில் மாவட்ட செயலாளர் திவாகரன் பேசினார்.

பனைக்குளம்,

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் யூனியன் உச்சிப்புளியில் தி.மு.க. தலைவர் கருணாநிதி பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் மண்டபம் கிழக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் முத்துச்செல்வம் தலைமையில் நடந்தது. மாவட்ட பிரதிநிதிகள் கோவிந்தமூர்த்தி, இக்பால் மற்றும் நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். ஒன்றிய அவை தலைவர் நாகராஜன் வரவேற்று பேசினார். கூட்டத்தில் தலைமை கழக பேச்சாளர் பசும்பொன் ரவிச்சந்திரன் கலந்து கொண்டு பேசினார்.

முன்னதாக மாவட்ட செயலாளர் திவாகரன் பேசியதாவது:- தமிழகத்தில் 108 ஆம்புலன்சு சேவையை தொடங்கி வைத்து உயிர்காக்கும் திட்டத்தை கொண்டுவந்தது தி.மு.க. தலைவர் கருணாநிதி என்பதை யாராலும் மறக்க முடியாது. முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தவறான வழியில் ஆட்சி நடத்துகிறார். மக்கள் போராட்டம் தான் இந்த ஆட்சியில் அதிகரித்துஉள்ளது. தலையாட்டி பொம்மை போல மத்திய அரசுக்கு தலையாட்டிக்கொண்டு முதல்-அமைச்சர் ஆட்சி நடத்துகிறார்.

தி.மு.க. சிறைக்கு செல்ல அஞ்சாத சிங்கங்களை கொண்ட இயக்கம். காங்கிரஸ் ஆட்சியை விட பா.ஜனதா ஆட்சியில் பெட்ரோல், டீசல் விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்துஉள்ளது. இதன் மூலம் விலைவாசி விறுவிறுவென உயர்ந்துள்ளது. வர இருக்கும் தேர்தலில் தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் கொடியேற்றுவது உறுதி.

இவ்வாறு அவர் பேசினார்.

Next Story