பூனை கிராமம்
மேற்கு சைபீரியாவில் உள்ள பனி சூழ்ந்த ப்ரைகோரோட்னி கிராமம், மற்ற கிராமங்களைவிட வித்தியாசமானது.
இங்கே ஆயிரக்கணக்கான சைபீரிய பூனைகள் வசிப்பதால், ‘கோஷ்லாண்டியா’ அதாவது பூனைகளின் நிலம் என்று அழைக்கிறார்கள். 14 ஆண்டுகளுக்கு முன்பு மற்ற கிராமங்களைப்போல்தான் இதுவும் இருந்தது. 2003-ம் ஆண்டு 59 வயது அல்லாவும் அவரது கணவர் செர்கேயும் ஓர் அழகான சைபீரிய பூனையை கிராமத்துக்குக் கொண்டு வந்தனர். புஷ்கா என்ற இந்தப் பூனை, ஒரு வருடம் கழித்து 5 குட்டிகளை ஈன்றது. சில ஆண்டுகளில் பூனைகளின் எண்ணிக்கை நூற்றுக் கணக்கில் பெருகிவிட்டது. அல்லாவின் பண்ணை, வீடு, தெரு என்று எங்கு பார்த்தாலும் பூனைகளாகத் திரிந்தன. எவ்வளவு பூனைகள் இருக்கின்றன என்று யாராவது கேட்டால், ‘பத்து லட்சம் பூனைகளுக்கு மேல் இருக்கலாம்’ என்று பதில் சொல்கிறார் அல்லா. சைபீரிய பூனைகள் உருவத்தில் பெரியவை. ஒவ்வொரு பூனையும் ஒவ்வொரு விதத்தில் அழகாக இருக்கும்.
Related Tags :
Next Story