திருக்குறுங்குடியில் பரபரப்பு போலீசார் தாக்கியதாக விவசாயி தற்கொலை முயற்சி


திருக்குறுங்குடியில் பரபரப்பு போலீசார் தாக்கியதாக விவசாயி தற்கொலை முயற்சி
x
தினத்தந்தி 29 Jun 2018 2:00 AM IST (Updated: 28 Jun 2018 7:59 PM IST)
t-max-icont-min-icon

திருக்குறுங்குடியில் போலீசார் தாக்கியதாக விவசாயி தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

ஏர்வாடி, 

திருக்குறுங்குடியில் போலீசார் தாக்கியதாக விவசாயி தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

விவசாயி

நெல்லை மாவட்டம் திருக்குறுங்குடி லெவஞ்சிபுரம் வடக்கு தெருவை சேர்ந்தவர் கோயில்மணி (வயது 42), விவசாயி. இவர் நேற்று முன்தினம் இரவில் தனது வீட்டில் இருந்தார். அப்போது அங்கு வந்த திருக்குறுங்குடி போலீசார் கோயில்மணியை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றதாக தெரிகிறது.

அங்கு வைத்து மது பாட்டில்கள் வாங்கி அதனை அதிக விலைக்கு விற்பனை செய்வதாக கூறி சரமாரியாக தாக்கியதாகவும், பின்னர் அவரை போலீசார் விடுவித்ததாகவும் கூறப்படுகிறது.

தற்கொலை முயற்சி

போலீசார் தாக்கியதால் மனமுடைந்த கோயில்மணி, நம்பிதோப்பில் உள்ள தனது தோட்டத்திற்கு சென்றார். அங்கு வி‌ஷம் குடித்து மயங்கி கிடந்தார்.

இதைக்கண்ட அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

அங்கு அவருக்கு  தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

 இதுகுறித்து திருக்குறுங்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். போலீசார் தாக்கியதாக விவசாயி தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Next Story