நெல்லை –தாம்பரம் அந்தியோதயா ரெயில் பயண நேரத்தை குறைக்க வேண்டும் பயணிகள் நலச்சங்கம் வலியுறுத்தல்


நெல்லை –தாம்பரம் அந்தியோதயா ரெயில் பயண நேரத்தை குறைக்க வேண்டும் பயணிகள் நலச்சங்கம் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 29 Jun 2018 2:30 AM IST (Updated: 28 Jun 2018 8:22 PM IST)
t-max-icont-min-icon

நெல்லை –தாம்பரம் இடையே இயக்கப்படும் அந்தியோதயா ரெயில் பயண நேரத்தை குறைக்க வேண்டும் என்று ரெயில் பயணிகள் நலச்சங்கத்தினர் வலியுறுத்தி உள்ளனர்.

நெல்லை, 

நெல்லை –தாம்பரம் இடையே இயக்கப்படும் அந்தியோதயா ரெயில் பயண நேரத்தை குறைக்க வேண்டும் என்று ரெயில் பயணிகள் நலச்சங்கத்தினர் வலியுறுத்தி உள்ளனர்.

இதுதொடர்பாக மும்பை தமிழின ரெயில் பயணிகள் நலச்சங்க பொதுச் செயலாளர் அப்பாதுரை, ரெயில்வே மந்திரி பியூர் கோயல் மற்றும் தென்னக ரெயில்வே பொது மேலாளர் அலுவலகத்துக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறிஇருப்பதாவது:–

பயண நேரம் 

ரெயில்வே வரலாற்றில் நெல்லை எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு அடுத்தபடியாக நெல்லையில் இருந்து சென்னைக்கு 2–வது தினசரி ரெயிலாக அந்தியோதயா எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்படுகிறது. நெல்லை –சென்னை தாம்பரம் அந்தியோதயா ரெயிலை பொதுமக்கள் வரவேற்று உள்ளனர். இந்த ரெயில் பயண நேரத்தை 16 மணி நேரத்தில் இருந்து குறைக்க வேண்டும்.

நெல்லையில் இருந்து செல்லும் போது விழுப்புரம், செங்கல்பட்டு ரெயில் நிலையங்களில் இந்த ரெயிலை நிறுத்தி வைத்து மற்ற ரெயில்களுக்கு வழி விடுவதை தவிர்த்தால் தாம்பரத்துக்கு காலை 9.45 மணிக்கு செல்வதற்கு பதிலாக முன்னதாக காலை 7.30 மணிக்கே சென்றடைய முடியும்.

அதே போல் இந்த ரெயில் தாம்பரத்தில் இருந்து இரவு 12 மணிக்கு இயக்குவதற்கு பதிலாக முன்னதாக இரவு 10 மணிக்கு புறப்பட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கூடுதல் பெட்டிகள் 

இந்த ரெயிலில் தற்போது உள்ள 16 பெட்டிகளின் எண்ணிக்கையை 24 பெட்டிகளாக உயர்த்த வேண்டும். கூடுதலாக இணைக்கப்படும் 8 பெட்டிகளை படுக்கை வசதி கொண்ட முன்பதிவு பெட்டிகளாக இணைத்தால் முதியோர் பயன் அடைவார்கள்.

மேலும் நாகர்கோவில் –சென்னை இடையே மேலும் ஒரு அந்தியோதயா ரெயிலை நெல்லை, மதுரை, திருச்சி, விருத்தாசலம் வழியாக இயக்க வேண்டும். இரட்டை வழி பாதையில் மின்சார ரெயிலாக இயக்கினால் 13 நேரத்தில் இந்த பயணம் எளிதாக இருக்கும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு உள்ளது.


Next Story