மானாமதுரை பகுதி வைகையாற்றை பாதுகாக்கப்பட்ட குடிநீர் மண்டலமாக அறிவிக்க வேண்டும்: மாரியப்பன்கென்னடி கோரிக்கை
மானாமதுரை பகுதி வைகையாற்றை பாதுகாக்கப்பட்ட குடிநீர் மண்டலமாக அறிவிக்க வேண்டும் என்று தகுதி நீக்கம் செய்யப்பட்ட மானாமதுரை தொகுதி எம்.எல்.ஏ மாரியப்பன் கென்னடி கோரிக்கை விடுத்துள்ளார்.
மானாமதுரை,

இது குறித்து அவர் அரசுக்கு கோரிக்கை விடுத்து வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-
மானாமதுரை பகுதி வைகையாற்றில் இருந்து சிவகங்கை, மதுரை, விருதுநகர், ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களுக்கான கூட்டு குடிநீர் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தினசரி லட்சக்கணக்கான லிட்டர் தண்ணீர் எடுக்கப்பட்டு இந்த 4 மாவட்டங்களிலும் உள்ள பொதுமக்களின் குடிநீர் தேவைக்காக வினியோகிக்கப்பட்டு வருகிறது. மதுரை விரகனூர் மதகு அணையில் இருந்து பார்த்திபனூர் மதகு அணை வரை 72 கூட்டுக்குடிநீர் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. இதில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலம் 42 குடிநீர் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.
மணலூரில் இருந்து மதுரை கிழக்கு ஒன்றியத்திற்கும், திருப்புவனத்தில் இருந்து அருப்புக்கோட்டைக்கும், திருப்பாச்சேத்தியில் இருந்து கட்டனூர் மற்றும் படமாத்தூர் தனியார் சர்க்கரை ஆலைக்கும், ராஜகம்பீரத்தில் இருந்து சாயல்குடிக்கும், இடைக்காட்டூரில் இருந்து சிவகங்கை நகராட்சிக்கும் ராட்சத கிணறுகள் மூலம் தினந்தோறும் வைகையாற்றில் இருந்து தண்ணீர் எடுக்கப்பட்டு குடிநீர் தேவைக்காக அனுப்பப்படுகின்றன. இந்த நிலையில் மானாமதுரை தொகுதிக்குட்பட்ட திருப்புவனம், திருப்பாச்சேத்தி, மானாமதுரை உள்ளிட்ட பகுதிகளில் நிலத்தடி நீர் மட்டம் வெகு பாதாளத்திற்கு சென்று விட்டது.
எனவே மானாமதுரை பகுதி வைகையாற்றை பாதுகாக்கப்பட்ட குடிநீர் மண்டலமாக அறிவிக்க வேண்டும். மற்ற பகுதிகளை விட மானாமதுரை வைகையாறு கடந்த 5 ஆண்டுகளாக தண்ணீர் இல்லாமல் வறண்டு விட்டது.
பொதுப்பணித்துறை மூலம் வாகுடி, செய்களத்துார், தெ.புதுக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் அரசு மணல் குவாரி அமைத்தால் நிலத்தடி நீர் மட்டம் இன்னும் வெகு பாதாளத்திற்கு செல்ல வாய்ப்புள்ளது. எனவே மானாமதுரை பகுதியை பாதுகாப்பான குடிநீர் மண்டலமாக அறிவிக்க வேண்டும். அதன் மூலம் இப்பகுதியில் நிலத்தடி நீர் மட்டத்தை காப்பாற்ற முடியும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Tags :
Next Story