திருச்சுழி, அருப்புக்கோட்டை பகுதிகளில் தனியார் வாகனங்களில் தரமற்ற குடிநீர் விற்பதாக புகார்
திருச்சுழி, நரிக்குடி, அருப்புக்கோட்டை ஒன்றிய கிராமப் பகுதிகளில் தனியார் வாகனம் மூலம் விற்கப்படும் குடிநீரின் தரத்தை ஆய்வு செய்யவேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.
திருச்சுழி,

மாவட்ட நிர்வாகம் குடிநீர் வினியோகம் தொடர்பாக உள்ளாட்சி அமைப்புகளுக்கு உரிய அறிவுறுத்தல் வழங்கி உள்ள போதிலும் நிதி பற்றாக்குறை காரணமாக கிராம பஞ்சாயத்துகளில் சீரான குடிநீர் வினியோகத்துக்கு முறையான ஏற்பாடுகள் இல்லாத நிலையே தொடர்கிறது. இந்த நிலையில் திருச்சுழி, நரிக்குடி, அருப்புக்கோட்டைஒன்றிய கிராமப் பகுதிகளில் தனியார் நிறுவனங்கள் விலைக்கு குடிநீர் வினியோகம் செய்து வருகிறது. பல தனியார் வாகனங்களில் குடிநீர் என்றும், வேறு சில தனியார் வாகனங்களில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் என்றும் எழுதப்பட்டு உள்ளது.
இவ்வாறு எழுதுவதற்கு முறையான அனுமதி பெறப்பட்டு உள்ளதா, இவ்வாறு வாகனங்களில் வினியோகம் செய்யப்படும் குடிநீர் குடிப்பதற்கு தகுதியாக உள்ளதா என்பதை ஆய்வு செய்ய ஒன்றிய நிர்வாகமோ, மாவட்ட நிர்வாகமோ எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப் படுகிறது.
குடிநீர் பிரச்சினை கடுமையாகி வரும் நிலையில் குடிநீர் வினியோகம் செய்யும் தனியார் வாகனங்கள் அதிகரித்து வருகிறது. டிராக்டர்கள், டேங்கர் லாரிகள் மூலமும் குடிநீர் வினியோகம் செய்யப்படும் நிலை உள்ளது. இவ்வாறு வினியோகம் செய்யப்படும் குடிநீரால் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது.
எனவே மாவட்ட நிர்வாகம், உணவு பாதுகாப்பு மற்றும் சுகாதாரத் துறை அதிகாரிகள் மூலம் குடிநீர் வினியோகம் செய்யும் தனியார் வாகனங்களை முறையாக ஆய்வு செய்வதோடு வினியோகம் செய்யப்படும் குடிநீரின் தரத்தையும் முறையாக ஆய்வு செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

Related Tags :
Next Story