ராமநாதபுரம் அரசு டாக்டருக்கு மாற்றுப்பணி வழங்கியதற்கு தடை மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
ராமநாதபுரம் அரசு மருத்துவமனை டாக்டருக்கு மாற்றுப்பணி வழங்கிய உத்தரவுக்கு தடை விதித்து மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
மதுரை,

ராமநாதபுரம் மாவட்டம் மணக்குடியை சேர்ந்தவர் வ.து.நடராஜன். முன்னாள் அமைச்சர். அ.ம.மு.க.வின் அமைப்பு செயலாளராக உள்ளார். இவருடைய மகன் மதிவாணன். எலும்பு அறுவை சிகிச்சை நிபுணரான இவர், கடந்த டிசம்பர் மாதம் ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் டாக்டராக பணியில் சேர்ந்தார். இவர் திடீரென திருவாடானையில் உள்ள தாலுகா மருத்துவமனைக்கு இடமாற்றம் செய்யப்பட்டார்.
இதை எதிர்த்து டாக்டர் மதிவாணன், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், ‘தமிழக அரசின் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மணிகண்டனின் அறிவுறுத்தலின்பேரில் எனக்கு மாற்றுப்பணி(டெபுடேசன்) வழங்குவதாகவும், மறு உத்தரவு வரும் வரை அங்கு பணியாற்ற வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் பணியாற்றியபோது என் மீது எந்த புகாரும் அளிக்கப்படவில்லை.
அமைச்சரின் அறிவுறுத்தலால் தான் என்னை இடமாற்றம் செய்து உள்ளதாக சம்பந்தப்பட்ட உத்தரவில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த உத்தரவு சட்டவிரோதமானது. எனவே என்னை இடமாற்றம் செய்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும். அந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி ஆர்.சுரேஷ்குமார் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.
முடிவில், மனுதாரருக்கு வழங்கப்பட்ட மாற்றுப்பணி உத்தரவுக்கு தடை விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.

Related Tags :
Next Story