சென்னை-சேலம் 8 வழிச்சாலை திட்டத்துக்கு தடை கேட்டு வழக்கு மத்திய, மாநில அரசுகளுக்கு நோட்டீஸ்: ஐகோர்ட்டு உத்தரவு
சென்னை-சேலம் பசுமை வழிச்சாலை திட்டத்துக்கு தடை கேட்டு தொடரப்பட்ட வழக்கிற்கு பதில் அளிக்கும்படி மத்திய, மாநில அரசுகளுக்கு சென்னை ஐகோர்ட்டு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.
சென்னை,

பூவுலகின் நண்பர்கள் அமைப்பைச் சேர்ந்த சுந்தர்ராஜன் என்பவர், சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-
சென்னை -சேலம் பசுமை வழிச்சாலை திட்டத்தின் காரணமாக காஞ்சீபுரம், திருவண்ணாமலை, தர்மபுரி, கிருஷ்ணகிரி மற்றும் சேலம் மாவட்ட மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
நில ஆர்ஜிதம் தொடர்பாக பொதுமக்களிடம் கருத்து கேட்கப்படவில்லை. நில ஆர்ஜித சட்டம் 1894-ஐ மாற்றி கடந்த, 2013-ம் ஆண்டு மத்திய அரசு புதிய சட்டத்தை கொண்டுவந்துள்ளது. ‘நியாயமான இழப்பீடு, மறுவாழ்வு, மறு குடியமர்வு மற்றும் வெளிப்படையான நில ஆர்ஜிதம்’ என்ற அந்த புதிய சட்டம் கடந்த 2014-ம் ஆண்டு முதல் அமலுக்கு வந்துள்ளது
இந்த சட்டத்தின்படி, உள்ளாட்சி அமைப்புகளிலும், கிராம சபையிடமும் நிலம் ஆர்ஜிதம் குறித்து உரிய ஆலோசனை நடத்த வேண்டும். அப்போது, நில ஆர்ஜிதம் குறித்து கேள்வி எழுப்பவும் மக்களுக்கு உரிமை உள்ளது.
ஆனால், இந்த புதிய சட்டப்பிரிவு 105, எதற்காக நில ஆர்ஜிதம் செய்யப்படுகிறது? என்பதை வெளிப்படையாக தெரிவிக்க வேண்டாம் என்று உள்ளது. இந்த பிரிவு ஒட்டுமொத்த சட்டத்துக்கு எதிராக உள்ளதால், இதை ரத்து செய்யவேண்டும். சென்னை-சேலம் பசுமை வழிச்சாலை திட்டத்துக்கு தடை விதிக்கவேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த மனு நீதிபதி டி.எஸ்.சிவஞானம், என்.சேஷசாயி ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசு சார்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல், தமிழக அரசு சார்பில் அட்வகேட் ஜெனரல் விஜய் நாராயண், மனுதாரர் சார்பில் வக்கீல் எம்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் ஆஜராகி வாதிட்டார்கள்.
இதையடுத்து, இந்த வழக்கிற்கு பதில் அளிக்கும்படி மத்திய, மாநில அரசுகளுக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
விசாரணையை வருகிற ஜூலை 12-ந்தேதிக்கு தள்ளிவைத்தனர்.

Related Tags :
Next Story