ரூ.10 லட்சம் மதிப்பில் பஸ்நிலையம் அன்புமணி ராமதாஸ் எம்.பி. அடிக்கல் நாட்டினார்


ரூ.10 லட்சம் மதிப்பில் பஸ்நிலையம் அன்புமணி ராமதாஸ் எம்.பி. அடிக்கல் நாட்டினார்
x
தினத்தந்தி 29 Jun 2018 4:00 AM IST (Updated: 29 Jun 2018 3:06 AM IST)
t-max-icont-min-icon

பெரும்பாலையில் ரூ.10 லட்சம் மதிப்பில் பஸ்நிலையம் அமைக்க டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. அடிக்கல் நாட்டினார்.

ஏரியூர்,

தர்மபுரி மாவட்டம் பென்னாகரத்தை அடுத்துள்ள பெரும்பாலையில் பஸ்நிலையம் அமைக்க தர்மபுரி பாராளுமன்ற உறுப்பினர் நிதியில் இருந்து ரூ.10 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டது. அதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சி நேற்று பெரும்பாலையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. கலந்துகொண்டு பஸ்நிலையம் அமைக்க அடிக்கல் நாட்டினார்.

பின்னர் அவர் பொதுமக்களிடம் பேசியதாவது:- பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று பெரும்பாலையில் பஸ் நிலையம் அமைக்க ரூ. 10 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்வது என முடிவெடுக்கப்பட்டது. ஆனால் தற்போது ரூ. 5 லட்சம் உயர்த்தி 15 லட்சமாக நிதி ஒதுக்கீடு செய்ய படுகிறது.

இந்த கூடுதல் நிதி சுகாதார வளாக வசதிக்காக பயன்படுத்தப்படும். கர்நாடக அரசு காவிரியில் தண்ணீர் தானாக திறக்கவில்லை. உபரி நீரை தான் திறந்திருக்கிறது. அப்படி இருக்க, தமிழக அரசு காவிரியில் நீர் வந்ததை கொண்டாடுவது மக்களை ஏமாற்றும் வேலை. ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம் கிடைக்காத பகுதிகளுக்கு குடிநீர் வழங்க நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

பெரும்பாலையில் உள்ள மருத்துவமனையில் பகுதிநேர மருத்துவர் தான் உள்ளார். இனி முழு நேர மருத்துவர்கள் செயல்பட நடவடிக்கை எடுக்கப்படும். கூடுதல் செவிலியர்கள் நியமிக்கப்படுவார்கள். மேலும் சாக்கடை கால்வாய் அமைக்கவும் நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது என பேசினார். தொடர்ந்து அன்புமணி ராமதாஸ் எம்.பி. பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார்.

இந்த விழாவில் மாவட்ட திட்ட இயக்குனர் காளிதாசன், வட்ட வளர்ச்சி அலுவலர்கள் கிருஷ்ணன், விமலன், பென்னாகரம் தாசில்தார் அழகு சுந்தரம் மற்றும் பா.ம.க. நிர்வாகிகள் கலந்து கொண்டனர். 

Next Story