தமிழிசை சவுந்தரராஜனை கண்டித்து பா.ம.க.வினர் ஆர்ப்பாட்டம்


தமிழிசை சவுந்தரராஜனை கண்டித்து பா.ம.க.வினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 29 Jun 2018 4:00 AM IST (Updated: 29 Jun 2018 3:06 AM IST)
t-max-icont-min-icon

தமிழக பா.ஜனதா கட்சி தலைவர் தமிழிசை சவுந்தரராஜனை கண்டித்தும், அதற்காக ராமதாசிடமும், வன்னியர் சமுதாயத்திடமும் நிபந்தனையின்றி மன்னிப்பு கேட்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டம் நடந்தது.

தஞ்சாவூர்,

30 ஆண்டுகளுக்கு முன்பு பா.ம.க. தலைவர் டாக்டர் ராமதாஸ் தலைமையில் நடந்த சமூக நீதிக்கான போராட்டத்தை கொச்சைப்படுத்தும் வகையில் பேசிய தமிழக பா.ஜனதா கட்சி தலைவர் தமிழிசை சவுந்தரராஜனை கண்டித்தும், அதற்காக ராமதாசிடமும், வன்னியர் சமுதாயத்திடமும் நிபந்தனையின்றி மன்னிப்பு கேட்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும் தஞ்சை ரெயிலடியில் பா.ம.க. சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

இதற்கு மாநில செயற்குழு உறுப்பினர் குஞ்சிதபாதம் தலைமை தாங்கினார். நிர்வாகி கோதை கேசவன் முன்னிலை வகித்தார். மாவட்ட செயலாளர் கோபிசந்தர் வரவேற்றார். இதில் நகர செயலாளர் அருண் குமார், ஒன்றிய செயலாளர் பாபு, கொள்கை விளக்க அணி மாவட்ட செயலாளர் மேகநாதன், மாவட்ட பொருளாளர் ரேணுகா கோவிந்தராஜன், மாவட்ட மகளிரணி செயலாளர் யோகலட்சுமி, நகர பொருளாளர் ராஜாத்தியம்மாள் உள்பட பலர் கலந்து கொண்டு பல்வேறு கோஷங்கள் எழுப்பினர்.

முடிவில் மாவட்ட இளைஞரணி செயலாளர் சரவணன் நன்றி கூறினார். 

Next Story