வீட்டுவரி உயர்த்தப்பட்டதை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
கரூர் மற்றும் குளித்தலையில் வீட்டுவரி உயர்த்தப்பட்டதை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
குளித்தலை,
கரூர் நகர மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் கரூர் தாலுகா அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு கரூர் நகர செயலாளர் ஜோதிபாசு தலைமை தாங்கினார். முன்னாள் மாநிலக்குழு உறுப்பினர் ரத்தினவேலு முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் கரூர் நகராட்சி சார்பில் வீட்டு வரியை உயர்த்தியதற்கு கண்டனம் தெரிவித்து கோஷங்களை எழுப்பினர். மேலும் பழையபடியே வீட்டுவரியை வசூலிக்க வேண்டும், புதிதாக போடப்பட்ட குப்பை வரியை ரத்து செய்ய வேண்டும். கோடிக்கணக்கில் செலவு செய்து குடிநீர் மேம்பாட்டு பணிகள் நடப்பதாக அதிகாரிகள் கூறும் நிலையில், நகராட்சி பகுதியில் காவிரி குடிநீர் தினசரி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர். ஆர்ப்பாட்டத்தில் அஜித்குமார், ராஜா, தண்டபாணி, ராஜாங்கம் உள்பட நிர்வாகிகள், உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.
இதேபோல், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் குளித்தலை நகராட்சி அலுவலகத்தில் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி மனு கொடுக்கும் போராட்டம் நேற்று நடைபெற்றது. போராட்டத்திற்கு கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ராஜூ தலைமை தாங்கினார். முன்னதாக குளித்தலை காந்திசிலை முன்பு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பின்னர் அங்கிருந்து ஊர்வலமாக சென்ற கட்சியினர், நகராட்சி அலுவலகத்திற்கு வந்து கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினார்கள்.
இதனைதொடர்ந்து குளித்தலை நகரத்தில் உயர்த்தப்பட்ட வீட்டு வரி, குப்பை வரியை ரத்து செய்யவேண்டும். ரெயில்வே கேட் - உழவர் சந்தை வரையுள்ள புறவழிச்சாலையை மீட்டு மீண்டும் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும். குளித்தலையில் புதிய பஸ் நிலையம் அமைக்க வேண்டும், தந்தை பெரியார் பாலத்தில் ஏற்பட்டுள்ள பழுதுகளை சரி செய்து இரவு நேரங்களில் அனைத்து மின்விளக்குகளும் எரிய ஏற்பாடு செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை நகராட்சி பொறியாளர் கார்த்திகேயனிடம் வழங்கினர்.

Related Tags :
Next Story