தமிழிசை சவுந்தரராஜனை கண்டித்து பா.ம.க.வினர் ஆர்ப்பாட்டம்
தமிழிசை சவுந்தர ராஜனை கண்டித்து நாகை, கீழ்வேளூர் அருகே ஆந்தகுடியில் பா.ம.கவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நாகப்பட்டினம்,
பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் குறித்தும், பா.ம.க. குறித்தும் விமர்சனம் செய்ததாக கூறி பாரதீய ஜனதா கட்சி தமிழக தலைவர் தமிழிசை சவுந்தரராஜனை கண்டித்தும், தமிழிசை சவுந்தரராஜன் மன்னிப்பு கேட்கக்கோரியும் நேற்று பா.ம.க. சார்பில் நாகை புதிய பஸ் நிலையம் அருகே உள்ள அவுரித்திடலில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு நாகை நகர செயலாளர் மகேஷ் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் தமிழிசை சவுந்தரராஜனை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் நகர, ஒன்றிய பொறுப்பாளர்கள் உள்பட பா.ம.க.வினர் கலந்து கொண்டனர்.
இதே போல கீழ்வேளூரை அடுத்த ஆந்தகுடி கடைத்தெருவில் பா.ம.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு நாகை மாவட்ட துணை செயலாளர் வைர.சிவக்குமார் தலைமை தாங்கினார். கீழ்வேளூர் ஒன்றிய செயலாளர் புகழேந்தி முன்னிலை வகித்தார். ஒன்றிய தலைவர் அரிகிருஷ்ணன் பேசினார். பாரதீய ஜனதா கட்சி தலைவர் தமிழிசை சவுந்தரராஜனை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் ஒன்றிய பொறுப்பாளர்கள் செந்தில், மணிகண்டன், குரு உள்பட பா.ம.க.வினர் பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஒன்றிய உழவர் பேரியக்க செயலாளர் சுப்பிரமணியன் நன்றி கூறினார்.

Related Tags :
Next Story