வில்லியனூர் வரதராஜ பெருமாள் கோவில் தேரோட்டம் திரளான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்
வில்லியனூரில் பிரசித்தி பெற்ற தென்கலை வரதராஜ பெருமாள் கோவில் தேரோட்டம் நடைபெற்றது. வடம் பிடித்து இழுத்து தேரோட்டத்தை முதல்-அமைச்சர் நாராயணசாமி தொடங்கி வைத்தார்.
வில்லியனூர்,

வில்லியனூரில் பிரசித்தி பெற்ற தென்கலை வரதராஜ பெருமாள் கோவில் உள் ளது. இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் பிரம்மோற்சவம் விமரிசையாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு பிரம்மோற்சவம் கடந்த 20-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவையொட்டி தினமும் காலையில் சிறப்பு அலங்காரத்துடன் விசேஷ பூஜைகள் நடத்தப்பட்டன. மாலையில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு பெருமாள் அருள் பாலித்தார். இந்த விழாவில் கடந்த 26-ந் தேதி வரதராஜ பெருமாள் திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று காலை 7 மணி அளவில் நடைபெற்றது. முதல்-அமைச்சர் நாராயணசாமி, அமைச்சர் நமச்சிவாயம் ஆகியோர் வடம் பிடித்து இழுத்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தனர். சுகுமாறன் எம்.எல்.ஏ., இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் தில்லைவேல், திருக்கோவிலூர் ஜீயர் ராமானுஜாச்சாரியார் மற்றும் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
4 ரத வீதிகளிலும் வலம் வந்து பகல் 11 மணி அளவில் தேர் மீண்டும் நிலையை வந்தடைந்தது.

Related Tags :
Next Story