பரோலில் சென்று தலைமறைவான கற்பழிப்பு குற்றவாளி பீகாரில் கைது
பரோலில் சென்று 2 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த கற்பழிப்பு வழக்கு குற்றவாளி பீகாரில் கைது செய்யப்பட்டார்.
மும்பை,
மும்பை ஆரே காலனி போலீசார் 14 வயது சிறுமியை கடத்தி கற்பழித்ததாக கடந்த 2012-ம் ஆண்டு மனோஜ் குமார் (வயது20) என்ற வாலிபரை கைது செய்தனர். மும்பை செசன்ஸ் கோர்ட்டு 2014-ம் ஆண்டு மனோஜ் குமாருக்கு ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பு கூறியது. இதையடுத்து அவர் நாசிக் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இந்தநிலையில் மனோஜ் குமார் கடந்த 2016-ம் ஆண்டு மார்ச் 6-ந்தேதி பரோலில் வெளியே வந்தார்.
ஆனால் பரோல் காலம் முடிந்தும் அவர் ஜெயிலுக்கு திரும்பிவில்லை. போலீசார் தனிப்படை அமைத்து தலைமறைவாக இருந்த வாலிபரை தேடிவந்தனர்.
இந்தநிலையில் அவர் பீகாரில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு சென்ற போலீசார் திருமண வீட்டில் உற்சாகமாக நடனமாடி கொண்டு இருந்த மனோஜ் குமாரை கைது செய்தனர். அப்போது அங்கு இருந்த மக்கள் போலீசாரை சிறை பிடிக்க முயன்றனர். தகவல் அறிந்து உள்ளூர் மீட்பு படை போலீசார் அங்கு வந்தனர். அவர்கள் பொதுமக்களிடம் இருந்து மும்பை போலீசாரை மீட்டனர்.
இதையடுத்து போலீசார் மனோஜ் குமாரை மும்பை அழைத்து வந்தனர். பின்னர் அவர் நாசிக் ஜெயில் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டார்.

Related Tags :
Next Story