புதுவையில் 5 நாட்களில் ரூ.50 கோடி மின் கட்டணம் வசூல்
கவர்னர் கிரண்பெடியின் அதிரடி நடவடிக்கையால் புதுவையில் கடந்த 5 நாட்களில் ரூ. 50 கோடிக்கு மின் கட்டணம் வசூலாகி உள்ளது.
புதுச்சேரி,

புதுவை அரசு நிதிநெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது. இந்த நிலையில் நிதி ஆதாரத்தை பெருக்குவது தொடர்பாக கவர்னர் கிரண்பெடி அதிரடி நடவடிக்கை மேற்கொண்டார். இதைத் தொடர்ந்து அரசு துறைகளில் வருவாய் இனங்களில் உள்ள பாக்கி தொகையை சம்பந்தப்பட்டவர்களிடம் இருந்து வசூலிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
இதில் மின்துறையில் ரூ.100 கோடிக்கும் மேல் மின்கட்டண பாக்கி வசூலிக்கப்படாமல் இருப்பது தெரியவந்தது. இதில் கவர்னர் கிரண்பெடி தலையிட்டு மின் கட்டண பாக்கி வைத்துள்ளவர்களின் பட்டியலை வெளியிட உத்தரவிட்டார். அதன்படி கட்டண பாக்கி வைத்துள்ளவர்களின் பட்டியலை பத்திரிகைகள் மூலம் புதுவை மின்துறை வெளியிட்டது. இதில் அரசியல்வாதிகள் உள்ளிட்ட பிரபலங்கள் பலர் கட்டண பாக்கி வைத்திருப்பது தெரியவந்தது.
இதனை தொடர்ந்து ஏற்கனவே மின்கட்டணம் பாக்கி வைத்துள்ளவர்கள் அதனை செலுத்தி வருகின்றனர்.
இந்தநிலையில் இந்த மாதத்திற்கான மின் கட்டணம் ரூ.45 கோடியே 31 லட்சத்து 94 ஆயிரத்து 696-ம் ஏற்கனவே நுகர்வோர் பாக்கி வைத்து இருந்த மின் கட்டணம் ரூ.4 கோடியே 78 லட்சத்து 23 ஆயிரத்து 509-ம் சேர்த்து கடந்த 5 நாட்களில் மட்டும் மின்கட்டண பாக்கி ரூ.50 கோடியே 10 லட்சத்து 18 ஆயிரத்து 205 வசூலாகி உள்ளது.

Related Tags :
Next Story