மாவட்டத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிப்பது குறித்த ஆய்வுக்கூட்டம்
விழுப்புரம் மாவட்டத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிப்பது குறித்த ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.
விழுப்புரம்,
விழுப்புரம் மாவட்டத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிப்பது குறித்த ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.
விழுப்புரம் மாவட்டத்தில் நீண்ட நாட்களாக நிலுவையில் இருக்கும் வழக்குகளை விரைந்து முடிப்பது குறித்த ஆய்வுக்கூட்டம் நேற்று மாலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நடைபெற்றது.
கூட்டத்திற்கு மாவட்ட தலைமை குற்றவியல் நீதிபதி காந்தி தலைமை தாங்கினார். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில், மாவட்டத்தில் உள்ள போலீஸ் நிலையங்களில் விசாரணை முடிந்து நிலுவையில் உள்ள வழக்குகளை நீதிமன்ற விசாரணைக்கு எடுத்து விரைந்து முடிப்பது குறித்தும், பிடி ஆணை வழக்குகளில் தலைமறைவாக இருக்கும் குற்றவாளிகளை உடனடியாக கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்க வேண்டும் என்றும், பிடி ஆணை வழக்குகளை விரைந்து முடிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போலீ சாருக்கு அறிவுறுத்தப்பட்டது. தொடர்ந்து, சட்டம்- ஒழுங்கு குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது. இந்த கூட்டத்தில் துணை போலீஸ் சூப்பிரண்டுகள் சங்கர், திருமால், ராஜேந்திரன், இளங்கோவன், ரவிச்சந்திரன், கோமதி, குற்ற வழக்கு தொடர்வுத்துறை உதவி இயக்குனர் செல்வராஜ் மற்றும் மாவட்டத்தில் உள்ள குற்றவியல் நீதிமன்ற நீதிபதிகள், போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் கலந்துகொண்டனர்.

Related Tags :
Next Story