3 மேல்-சபை தொகுதி தேர்தல் முடிவு சிவசேனா, பா.ஜனதா தலா ஒரு தொகுதியில் வெற்றி


3 மேல்-சபை தொகுதி தேர்தல் முடிவு சிவசேனா, பா.ஜனதா தலா ஒரு தொகுதியில் வெற்றி
x
தினத்தந்தி 29 Jun 2018 4:37 AM IST (Updated: 29 Jun 2018 4:37 AM IST)
t-max-icont-min-icon

மராட்டிய மேல்-சபை தொகுதிகளான தானே ஆசிரியர்கள் தொகுதி, கொங்கன் மற்றும் மும்பை பட்டதாரிகள் தொகுதி ஆகியவற்றுக்கு கடந்த 25-ந் தேதி தேர்தல் நடைபெற்றது.

மும்பை,

மேல்-சபை தொகுதி தேர்தலில் கூட்டணி கட்சிகளான பா.ஜனதா மற்றும் சிவசேனா தனித்தனியாக போட்டியிட்டன. இந்த தேர்தல் முடிவுகள் நேற்று வெளியாகின.

இதில் மும்பை பட்டதாரிகள் தொகுதி பா.ஜனதா வேட்பாளர் அமித் மேத்தாவை தோற்கடித்து சிவசேனா வேட்பாளர் விலாஸ் போட்னிஸ் வெற்றி பெற்றார்.

இதேபோல கொங்கன் பட்டதாரிகள் தொகுதியை பா.ஜனதாவை சேர்ந்த நிரஞ்சன் தவ்காரே கைப்பற்றினார். மேலும் லோக் பாரதி கட்சியை சேர்ந்த கபில் பாட்டீல் தானே ஆசிரியர்கள் தொகுதியை தக்க வைத்துக்கொண்டார். 

Next Story