திருச்சி அரசு போக்குவரத்துக்கழகத்துக்கு எளிதில் தீப்பிடிக்காத நவீன வசதிகளுடன் கூடிய 18 பஸ்கள் வந்தன: அடுத்த வாரம் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு விடப்படுகிறது

திருச்சி அரசு போக்குவரத்துக்கழகத்துக்கு எளிதில் தீப்பிடிக்காத நவீன வசதிகளுடன் கூடிய 18 பஸ்கள் வந்தன: அடுத்த வாரம் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு விடப்படுகிறது
x
தினத்தந்தி 30 Jun 2018 3:15 AM IST (Updated: 29 Jun 2018 11:19 PM IST)
t-max-icont-min-icon

திருச்சி அரசு போக்குவரத்துக்கழகத்துக்கு எளிதில் தீப்பிடிக்காத, நவீன வசதிகளுடன் கூடிய 18 பஸ்கள் வந்துள்ளன. இவை அடுத்த வாரம் பொதுமக்களின் பயன்பாட்டுக்கு விடப்படு கிறது.

திருச்சி,

திருச்சி அரசு போக்குவரத்துக்கழகத்துக்கு எளிதில் தீப்பிடிக்காத, நவீன வசதிகளுடன் கூடிய 18 பஸ்கள் வந்துள்ளன. இவை அடுத்த வாரம் பொதுமக்களின் பயன்பாட்டுக்கு விடப்படு கிறது.

தமிழக அரசு போக்குவரத்துக்கழகங்களில் பல்வேறு வழித்தடங்களில் இயக்கப்பட்டு வரும் மிகவும் பழைய பஸ்களுக்கு பதிலாக நவீன வசதிகளுடன் கூடிய புதிய பஸ்கள் விடப்பட இருக்கிறது. அரசு போக்குவரத்துக்கழகம் கும்பகோணம் கோட்டத்தின் திருச்சி மண்டலம் சார்பில் திருச்சி, கரூர், பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களில் பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த மாவட்டங்களில் இயக்கப்பட்டு வரும் பழைய பஸ்களுக்கு பதிலாக புதிய பஸ்கள் வாங்கப்பட்டு உள்ளன. ஒரு பஸ்சின் விலை சுமார் ரூ.20 லட்சமாகும்.

கரூரில் வடிவமைப்பு செய்யப்பட்டுள்ள இந்த பஸ்களில் எளிதில் தீப்பிடிக்காத வகையில், நவீன வசதிகள் செய்யப்பட்டு உள்ளன. அப்படியே தீப்பிடித்தாலும் முதலில் புகை தான் வரும். அதனை தெரிந்து கொண்டு பயணிகள் பஸ்சில் இருந்து இறங்கி தங்களை பாதுகாத்து கொள்ள முடியும். மேலும் சொகுசு இருக்கைகள், வேக கட்டுப்பாடு கருவிகளும் பொருத்தப்பட்டு உள்ளன. இத்தகைய வசதி கொண்ட 18 பஸ்கள் திருச்சி மண்டல அலுவலகத்துக்கு வந்துள்ளன. இந்த பஸ்கள் பிராட்டியூரில் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டு பதிவு செய்யப்பட்டு உள்ளன.

திருச்சி மண்டல அலுவலகத்துக்கு இன்னும் 6 புதிய பஸ்கள் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த வாரம் இந்த பஸ்கள் பொதுமக்களின் பயன்பாட்டுக்கு விடப்படும் என அரசு போக்குவரத்துக் கழக அதிகாரிகள் வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது.

Next Story