கொள்ளிடம் ஆற்றை பாதுகாக்கப்பட்ட குடிநீர் மண்டலமாக அரசு அறிவிக்க வேண்டும்: விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் வலியுறுத்தல்
கொள்ளிடம் ஆற்றை பாதுகாக்கப்பட்ட குடிநீர் மண்டலமாக அரசு அறிவிக்க வேண்டும் என்று அரியலூர் மாவட்ட விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
அரியலூர்,

அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், அரியலூர் மாவட்ட விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு கலெக்டர் விஜயலட்சுமி தலைமை தாங்கினார். இதில் பல்வேறு விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டு கோரிக்கை மனுக்களை கலெக்டரிடம் வழங்கினர்.
கூட்டத்தில், கரும்பு விவசாயிகள் சங்க தலைவர் வாரணவாசி ராஜேந்திரன் பேசுகையில், அரியலூர் மாவட்டத்தில் நிலத்தடி நீர் குடிப்பதற்கும், விவசாயத்திற்கும் உகந்தது இல்லை என்று ஆய்வுகள் கூறுகின்றன. கொள்ளிடம் ஆற்று நீர் மட்டுமே குடிக்க உகந்தது. ஆகையால் கொள்ளிடம் ஆற்றை பாதுகாக்கப்பட்ட குடிநீர் மண்டலமாக அரசு அறிவிக்க வேண்டும். இதற்கு மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு வங்கியில் கரும்பு பயிறுக்கு கடன் தர மறுக்கின்றனர். கடன் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.
தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் தா.பழூர் ஒன்றிய செயலாளர் பாண்டியன் பேசுகையில், தா.பழூர் பகுதியில் அறிவிக்கப்படாத மின் தடை ஏற்படுகிறது. மேலும் இரவு நேரங்களில் மின்தடை தொடர்கிறது. இதனால் எங்கள் பகுதியில் விவசாயிகள், பொதுமக்கள், மாணவ-மாணவிகள் அவதிக்குள்ளாகின்றனர். இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும். தா.பழூர் பகுதியில் தெரு நாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது. நாய்களை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார். மேலும் விவசாயிகள் பலர் கோரிக்கைகள் குறித்து பேசினர்.
கூட்டத்தில் கலெக்டர் விஜயலட்சுமி பேசியதாவது:-
2018-19 ஆம் ஆண்டிற்கான காரீப் பருவத்திற்கு பயிர் காப்பீடு செய்வதற்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் நெல் குறுவை பயிருக்கு பிரீமிய தொகையாக ஒரு ஏக்கருக்கு ரூ.591 நிர்ணயிக்கப்பட்டு, அடுத்த மாதம்(ஜூலை) 16-ந் தேதிக்குள் பயிர் காப்பீடு செய்திட காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதே போல் இதர பயிர்களான உளுந்துக்கு ரூ.286-ம், சோளத்திற்கு ரூ.196-ம், பருத்திக்கு ரூ.1,240-ம், கம்பிற்கு ரூ.196-ம், எள்ளுக்கு ரூ.240-ம், கடலைக்கு ரூ.498-ம், மக்காச்சோளத்திற்கு ரூ.405-ம் மற்றும் துவரைக்கு ரூ.286 வீதம் பிரீமியத் தொகை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இவற்றுக்கு வருகிற ஆகஸ்டு மாதம் 16-ந்தேதிக்குள் பயிர் காப்பீடு செய்திட காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேற்கண்ட திட்டங்கள் தொடர்பாக எழும் சந்தேகங்களுக்கு சம்பந்தப்பட்ட வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகத்தை அணுகி பயன் பெறலாம்.
வேளாண்துறை மற்றும் தோட்டக்கலைத்துறைகள் மூலம் சொட்டுநீர் மற்றும் தெளிப்புநீர் பாசன கருவிகளை அமைக்க விவசாயிகளுக்கு அரசு மானியமாக அரியலூர் மாவட்டத்திற்கு ரூ.7.92 கோடி நிதி இலக்கு ஒதுக்கீடு பெறப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அதிகாரி தனசேகரன், திட்ட இயக்குனர் (ஊரக வளர்ச்சி முகமை) லோகேஸ்வரி, இணை இயக்குனர் (வேளாண்மை) உதயகுமார், துணை இயக்குனர் (தோட்டக்கலைத்துறை) அன்புராஜன் மற்றும் அனைத்துத்துறை அலுவலர்கள், விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story