குழந்தை கடத்தல் தொடர்பாக தவறான தகவல்களை சமூக வலைத்தளங்களில் பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்:மத்திய மண்டல ஐ.ஜி. வரதராஜூ பேட்டி
குழந்தை கடத்தல் தொடர்பாக தவறான தகவல்களை சமூக வலைத்தளங்களில் பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய மண்டல ஐ.ஜி.வரதராஜூ கூறினார்.
புதுக்கோட்டை,

தமிழகம் முழுவதும் நேற்று போலீசார் பங்கேற்ற ரத்ததான முகாம் நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக புதுக்கோட்டை மாவட்ட ஆயுதப்படை மண்டபம் மற்றும் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ஆகிய 2 இடங்களில் போலீசார் கலந்து கொண்ட ரத்ததான முகாம் நடைபெற்றது. இதில் ஆயுதப்படை மண்டபத்தில் நடைபெற்ற ரத்ததான முகாமை புதுக்கோட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வராஜ் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.
இதில் தனிப்பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் மெய்யப்பன், முருகானந்தம் உள்பட ஏராளமான ஆண் மற்றும் பெண் போலீசார் கலந்து கொண்டு ரத்ததானம் செய்தனர். இந்த ரத்ததான முகாமை மத்திய மண்டல ஐ.ஜி வரதராஜூ பார்வையிட்டு ஆய்வு செய்து, ரத்ததானம் வழங்கிய போலீசாருக்கு சான்றிதழ்களை வழங்கி பாராட்டி னார். இதில் துணை போலீஸ் சூப்பிரண்டுகள் செந்தமிழன், ஆறுமுகம், போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் கருணாகரன், வாசுதேவன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து மத்திய மண்டல ஐ.ஜி வரதராஜூ நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- மத்திய மண்டலத்தை சேர்ந்த 15 இடங்களில் 2 ஆயிரத்து 531 போலீசார் ரத்ததானம் வழங்கி உள்ளனர். இதில் புதுக்கோட்டை மாவட்டத்தில் 180 போலீசார் ரத்த தானம் வழங்கி உள்ளனர். மத்திய மண்டலத்தில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு குற்ற சம்பவங்கள் குறைந்து உள்ளது.
குழந்தை கடத்தல் தொடர்பாக சமீப காலமாக சமூக வலைத்தளங்களில் தவறான தகவல்கள் பரவி வருகிறது. இதனால் பொதுமக்கள் மிகவும் விழிப்புணர்வோடு இருக்க, காவல்துறை சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் குழந்தை கடத்தல் தொடர்பாக தவறான தகவல்களை சமூக வலைத் தளங்களில் பரப்புவோர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். போலீசாரின் மன அழுத்தத்தை போக்க மாதம் தோறும் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்து வருகிறது. மேலும் அவர்களுக்கு மன அழுத்தத்தை போக்க வாரம் தோறும் அணிவகுப்பு நடக்கும்போது யோகா பயிற்சியும் கற்றுத் தரப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறி னார்

Related Tags :
Next Story