விபத்தில் பலியான மாணவன் குடும்பத்துக்கு ரூ.14½ லட்சம் நஷ்டஈடு விருதுநகர் கோர்ட்டு உத்தரவு
விபத்தில் பலியான மாணவன் குடும்பத்துக்கு இன்சூரன்ஸ் நிறுவனம் ரூ.14½ லட்சம் நஷ்டஈடு வழங்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார்.
விருதுநகர்,
விருதுநகர் என்.ஜி.ஓ. காலனியை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மகன் பிரவீன்(வயது 17). இவன் தனியார் பள்ளியில் பிளஸ்–1 படித்து வந்தான். கடந்த 5.8.2013 அன்று இவன் தாயார் சத்தியகாஞ்சனாவுடன் பள்ளிக்கு செல்வதற்காக பஸ் நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தான். அப்போது அந்த வழியாக வந்த கார் மோதியதில் மாணவன் பிரவீன் உடல் நசுங்கி இறந்தான். அவனது குடும்பத்தினர் நஷ்டஈடு கோரி மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த நீதிபதி பரிமளா இறந்த மாணவன் பிரவீன் குடும்பத்தினருக்கு ரூ.14 லட்சத்து 61 ஆயிரத்தை விருதுநகர் இன்சூரன்ஸ் நிறுவனம் வழங்க உத்தரவிட்டார்.
Related Tags :
Next Story