தந்தை-மகனால் தாக்கப்பட்ட வாலிபர் சாவு, ஒருவர் கைது
பூதப்பாண்டி அருகே தந்தை, மகனால் தாக்கப்பட்ட வாலிபர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதையடுத்து கொலை முயற்சி வழக்கு, கொலை வழக்காக மாற்றப்பட்டு ஒருவர் கைது செய்யப்பட்டார்.
பூதப்பாண்டி,
பூதப்பாண்டி அருகே உள்ள அழகியபாண்டியபுரம் அம்மன் கோவில் தெருவை சேர்ந்த லிங்கராஜா மகன் சபரீஷ் (வயது 20). ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இவர் கடந்த 25-ந் தேதி அழகியபாண்டியபுரம் பஸ் நிலையத்துக்கு பொருட்கள் வாங்க மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டு இருந்தார்.
அப்போது அதே பகுதியை சேர்ந்த வீரமணி மற்றும் அவருடைய மகன் கண்ணன் (வயது36) ஆகியோர் முன்விரோதம் காரணமாக சபரீஷ் மோட்டார் சைக்கிளை தடுத்து நிறுத்தி, அவரை இரும்பு கம்பியால் தாக்கினர். இதில் சபரீஷ் படுகாயம் அடைந்தார். அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு நாகர்கோவிலில் உள்ள ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இதுபற்றி பூதப்பாண்டி போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் வீரமணி, அவரது மகன் கண்ணன் மீது போலீசார் கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்தநிலையில், ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த சபரீஷ் நேற்று முன்தினம் இரவு பரிதாபமாக இறந்தார். இதையடுத்து, தந்தை, மகன் மீது பதிவு செய்யப்பட்டிருந்த கொலை முயற்சி வழக்கை கொலை வழக்காக போலீசார் மாற்றினர். மேலும், கண்ணனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Tags :
Next Story