காரில் கடத்தி வரப்பட்ட 3,684 மது பாக்கெட்டுகள் பறிமுதல்:2 பேர் கைது
சீர்காழி அருகே காரில் கடத்தி வரப்பட்ட 3,684 மது பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இது தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சீர்காழி,

நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சேகர் தேஷ்முக் உத்தரவின்பேரில் தனிப்படை பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் ராஜேஷ் மற்றும் போலீசார் சீர்காழி சட்டநாதபுரம் ரவுண்டானா பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக காரைக்கால் பகுதியில் இருந்து வந்த ஒரு காரை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் புதுச்சேரி மாநில மதுபான பாக்கெட்டுகள் 12 மூட்டைகளில் இருந்தது. அதில் மொத்தம் 3 ஆயிரத்து 684 மது பாக்கெட்டுகள் இருந்தன. உடனே போலீசார் மது பாக்கெட்டுகளையும், கடத்தலுக்கு பயன்படுத்திய காரையும் பறிமுதல் செய்தனர்.
பின்னர் போலீசார், காரை ஓட்டிவந்த காரைக்கால் பூவம் பகுதியை சேர்ந்த சண்முகம் (வயது 47), காரில் இருந்த திருநள்ளாறு பகுதியை சேர்ந்த சேகர் (42) ஆகிய 2 பேரை பிடித்து சீர்காழி மதுவிலக்குபிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர். இதுகுறித்து மதுவிலக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து சண்முகம், சேகர் ஆகிய 2 பேரை கைது செய்தனர்.

Related Tags :
Next Story