சுவர் இடிந்து விழுந்ததில் உயிரோடு புதைந்து பெண் பலி; கணவர் கவலைக்கிடம்
நள்ளிரவில் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த போது திடீரென சுவர் இடிந்து விழுந்ததில் உயிரோடு புதைந்து பெண் பரிதாபமாக இறந்தார். அவருடைய கணவர் கவலைக்கிடமான நிலையில் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். அவர்களுடைய மகன் கண் எதிரேயே இந்த துயர சம்பவம் நடந்தது.
ஆரல்வாய்மொழி,
நேற்று முன்தினம் இரவில் உமையோரன்பிள்ளை, அவருடைய மனைவி ஒரு அறையிலும், மகள் தேவி ஈஸ்வரி மற்றொரு அறையிலும் தூங்கிக் கொண்டிருந்தனர். மகன் வேல்முருகன் மட்டும் கண்விழித்து படித்துக் கொண்டிருந்தார்.
நள்ளிரவில் கணவன்-மனைவி தூங்கி கொண்டிருந்த அறையின் ஒரு பக்க சுவரானது திடீரென்று இடிந்து உள்பக்கமாக விழுந்தது. தூங்கிக் கொண்டிருந்த உமையோரன்பிள்ளை, அவருடைய மனைவி சந்திரிகா மீது இடிபாடுகள் விழுந்ததால், அவர்கள் உயிரோடு புதைந்தனர்.
தன் கண் முன்னே தாய், தந்தை இடிபாடுகளுக்குள் சிக்கி இருப்பதை அறிந்து மகன் வேல்முருகன் அலறினார். இதற்கிடையே தூங்கி கொண்டிருந்த தேவி ஈஸ்வரி பதறியபடி ஓடி வந்தார். இருவரும் புதையுண்டு கிடந்த பெற்றோரை காப்பாற்ற முயன்றனர்.
சுவர் இடிந்து விழுந்த சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினரும் அங்கு ஓடி வந்தனர். இடிபாடுகளை அகற்றி, புதையுண்டு கிடந்த இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள ஒரு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால், சந்திரிகா பரிதாபமாக இறந்துவிட்டார்.
படுகாயம் அடைந்த உமையோரன்பிள்ளை தேரேக்கால்புதூரில் உள்ள ஒரு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவருடைய நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த ஆரல்வாய்மொழி போலீசார் விரைந்து வந்தனர். சுவர் இடிந்து பலியான சந்திரிகாவின் உடலை பிரேத பரிசோதனைக்காக நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து ஆரல்வாய்மொழி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பக்கத்து இடத்தில் குழிதோண்டியதால் ஏற்பட்ட அதிர்வில் சுவர் இடிந்ததா?
உமையோரன்பிள்ளை வீட்டின் அருகே அதே பகுதியை சேர்ந்த ஒருவர் புதிதாக வீடு கட்டுவதற்கான பணிகளை செய்து வருகிறார். இதற்காக உமையோரன்பிள்ளை வீட்டின் சுவரையொட்டி, புதிய வீட்டுக்கான அஸ்திவாரம் அமைக்க குழி தோண்டப்பட்டுள்ளது. இவ்வாறு குழி தோண்டும் போது ஏற்பட்ட அதிர்வினால், உமையோரன்பிள்ளை வீட்டின் சுவர் இடிந்து விழுந்திருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர். இதுதொடர்பாக விசாரணை நடந்து வருகிறது.
உமையோரன்பிள்ளை வீட்டின் அருகே அதே பகுதியை சேர்ந்த ஒருவர் புதிதாக வீடு கட்டுவதற்கான பணிகளை செய்து வருகிறார். இதற்காக உமையோரன்பிள்ளை வீட்டின் சுவரையொட்டி, புதிய வீட்டுக்கான அஸ்திவாரம் அமைக்க குழி தோண்டப்பட்டுள்ளது. இவ்வாறு குழி தோண்டும் போது ஏற்பட்ட அதிர்வினால், உமையோரன்பிள்ளை வீட்டின் சுவர் இடிந்து விழுந்திருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர். இதுதொடர்பாக விசாரணை நடந்து வருகிறது.
Related Tags :
Next Story