அமராவதி ஆற்று தண்ணீரை கடைமடை பகுதி வரை கொண்டு செல்ல வழிவகை காண வேண்டும்: குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை
அமராவதி ஆற்று தண்ணீரை கடைமடை பகுதி வரை கொண்டு செல்ல வழிவகை காண வேண்டும் என்று குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.
கரூர்,

கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நேற்று விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் அன்பழகன் தலைமை தாங்கி விவசாயிகளிடம் குறைகளை கேட்டறிந்தார்.
கூட்டத்தில் கரூர் மாவட்ட ஆறுகள் பசுமை சங்க தலைவர் ராஜமாணிக்கம் பேசுகையில், திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பட்டறைகள் மூலம் ஆற்றில் சாயக்கழிவுகள் கலக்கிறது. இதன் காரணமாக கரூர் நொய்யல் ஆற்றில் மழைநீருடன், சாயக்கழிவும் சேர்ந்து வருவதால் நீர் ஆதாரம் பாதிக்கப்படுகிறது. அந்த பகுதியில் விளைவிக்கப்படும் பயிர் போதிய மகசூலை தருவதில்லை.
பொதுமக்கள் குடிநீரை காய்ச்சி வடிகட்டி குடித்தாலும் அதில் சில தனிமங்கள் அப்படியே தங்கி விடுகின்றன. இதனை உபயோகப்படுத்தும் போது உடலிலும் அது கலப்பதால் புற்றுநோய் உள்ளிட்டவை ஏற்பட வாய்ப்பிருக்கிறது. இதற்கு தீர்வு காண அதிகாரிகள் முன்வர வேண்டும். இதற்காக தனிக்குழு அமைத்து கண்காணிக்க வேண்டும். அடுத்த கூட்டத்தில், சாயக்கழிவை ஆற்றில் விடுபவர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை விவரத்தை தெரிவிக்க வேண்டும் என்றார்.
சின்னதேவன்பட்டியை சேர்ந்த தங்கவேல் உள்ளிட்ட விவசாயிகள் பேசுகையில், கரூர் மாவட்டத்தில் தைல மரங்களுக்கு பதிலாக சவுக்கு, மூங்கில் உள்ளிட்ட மரங்களை வளர்க்க வேண்டும். ஏனெனில், தைல மரங்கள் வறட்சியை உருவாக்ககூடியதாகும். வருகிற ஜூலை மாதம் 17, 18, 19 ஆகிய தேதிகளில் கோவையில் நடைபெறும் சுற்றுலாவுக்கு விவசாயிகளை அழைத்து செல்ல வேண்டும். விவசாய தேவைகளுக்காக நீர்நிலைகளில் வண்டல் மண் எடுக்க அனுமதி பெறுவதில் தாமதம் ஏற்படுகிறது. மேலும் ஏரி-குளம் உள்ளிட்ட நீர் நிலைகளில் மரக்கன்றுகள் நட்டு வளர்க்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.
மொஞ்சனூர் சந்திரசேகர் உள்ளிட்ட விவசாயிகள் கூறுகையில், பருவ காலத்தில் சாகுபடி செய்யப்படும் பயிர்கள் திடீரென ஏற்படும் தண்ணீர் பற்றாக்குறை உள்ளிட்டவற்றால் பாதிப்படைகிறது. எனவே, மகசூல் பாதிப்புக்கு இழப்பீடு வழங்க வேண்டும். கொடிக்கால் பயிருக்கு பசுமைக்குடில் அமைத்து தர வேண்டும் என்றனர்.
இதற்கு அதிகாரிகள் பதிலளித்து பேசுகையில், கரூர் மாவட்டத்தில் துவரை, உளுந்து, நிலக்கடலை, வாழை, மஞ்சள் உள்ளிட்ட பயிர்களுக்கு பகுதி வாரியாக பயிர் காப்பீடு திட்டத்தின்கீழ் இழப்பீடு வழங்கப்படுகிறது. எந்த பருவத்திலும் 50 சதவீதத்திற்கு மேல் பயிரில் பாதிப்பு இருந்தால் கட்டாயம் நிவாரணம் உண்டு என்று கூறினர்.
ஆண்டிபாளையத்தை சேர்ந்த விவசாயி நல்லுசாமி என்பவர், தென்னையில் இருந்து நீராபானம் எடுக்க அனுமதிக்க வேண்டும் என்று கூறினார்.
கரூர் மாவட்ட நிலத்தடிநீர் பாதுகாப்பு மற்றும் சாயக்கழிவால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் சங்க தலைவர் ராமலிங்கம் உள்ளிட்ட விவசாய சங்கத்தினர் பேசுகையில், திருப்பூர் மாவட்டம், அமராவதி அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீர் கரூர் கடைமடை பகுதி வரை கிடைப்பதில்லை.
சமீபத்தில் கரூர் அமராவதியில் திறந்து விடப்பட்ட தண்ணீர் குடிநீர் தேவைக்கு தான் சரியாக இருக்கிறது. விவசாயத்துக்கு பயன்தரவில்லை. இதனால், மாவட்டத்தில் சாகுபடி பரப்பு குறைந்து வருகிறது. ஆகவே, அமராவதி ஆற்றில் திறந்து விடப்படும் தண்ணீரை கடைமடை பகுதி வரை கொண்டு செல்ல வழிவகை காண வேண்டும் என்று கூறினர்.
மூன்று போகம் விவசாயம் நடந்த கரூர் பகுதியில் தற்போது மானாவாரி விவசாயமாக மாறிவிட்டது. எனவே, சிறப்பு அனுமதி என்ற பெயரில் தண்ணீர் வழங்க கூடாது. கடைமடை பகுதி வரை கொண்டு செல்ல வழிவகை கருணை காட்ட வேண்டும் என கூறி விவசாயிகள் சங்கத்தினர் கலெக்டரின் முன்பு வந்து கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் தெரிவித்தார்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அதிகாரி சூர்யபிரகாஷ், வேளாண்மை இணை இயக்குனர் ஜெயந்தி, கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் சீனிவாசன், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை பொறுப்பு) கந்தசாமி மற்றும் உழவர் ஆய்வு மன்ற அமைப்பாளர் சங்க தலைவர் கோபால்தேசிகன் உள்பட விவசாய சங்கத்தினர் பலர் கலந்து கொண்டனர்.

அதற்கு அமராவதி ஆறு வடிநிலகோட்ட அதிகாரி பேசுகையில், அரசு விதிகளின்படி அனுமதி பெற்று தான் தண்ணீர் விடப்படுகிறது என்று கூறினார்.
மூன்று போகம் விவசாயம் நடந்த கரூர் பகுதியில் தற்போது மானாவாரி விவசாயமாக மாறிவிட்டது. எனவே, சிறப்பு அனுமதி என்ற பெயரில் தண்ணீர் வழங்க கூடாது. கடைமடை பகுதி வரை கொண்டு செல்ல வழிவகை கருணை காட்ட வேண்டும் என கூறி விவசாயிகள் சங்கத்தினர் கலெக்டரின் முன்பு வந்து கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் தெரிவித்தார்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அதிகாரி சூர்யபிரகாஷ், வேளாண்மை இணை இயக்குனர் ஜெயந்தி, கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் சீனிவாசன், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை பொறுப்பு) கந்தசாமி மற்றும் உழவர் ஆய்வு மன்ற அமைப்பாளர் சங்க தலைவர் கோபால்தேசிகன் உள்பட விவசாய சங்கத்தினர் பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story