கடலூர் கிறிஸ்தவ தேவாலயத்தில் பைபிள் திருட்டு கண்ணாடி அறையை உடைத்து மர்ம நபர்கள் கைவரிசை


கடலூர் கிறிஸ்தவ தேவாலயத்தில் பைபிள் திருட்டு கண்ணாடி அறையை உடைத்து மர்ம நபர்கள் கைவரிசை
x
தினத்தந்தி 30 Jun 2018 3:45 AM IST (Updated: 30 Jun 2018 1:13 AM IST)
t-max-icont-min-icon

கடலூர் சப்–கலெக்டர் அலுவலகம் எதிரே தூய எபிபெனி தேவாலயத்தின் நுழைவு வாயில் சுற்றுச்சுவரில் கண்ணாடி அறை அமைத்து கிறிஸ்தவர்களின் புனித நூலான பைபிள் வைக்கப்பட்டு இருந்தது.

கடலூர்,

கடலூர் சப்–கலெக்டர் அலுவலகம் எதிரே தூய எபிபெனி தேவாலயம் உள்ளது. இந்த ஆலயத்தின் நுழைவு வாயில் சுற்றுச்சுவரில் கண்ணாடி அறை அமைத்து கிறிஸ்தவர்களின் புனித நூலான பைபிள் வைக்கப்பட்டு இருந்தது. இந்த பைபிளை தினந்தோறும் அந்த வழியாக செல்லும் மாணவ–மாணவிகள், பொதுமக்கள் உள்பக்கமாக வந்து, திறந்து படித்து விட்டு செல்வார்கள்.

அதன்படி நேற்று காலை அந்த வழியாக சென்ற பொதுமக்கள், பைபிளை படிப்பதற்காக சென்றபோது, அந்த கண்ணாடி அறை உடைக்கப்பட்டு கிடந்தது. அதில் இருந்த பைபிளை காணவில்லை. இதை யாரோ மர்ம நபர்கள் உடைத்து திருடிச்சென்று விட்டனர். இது பற்றி தகவல் அறிந்ததும் சபை ஆயர் அருண்ஜெபஸ் கடலூர் புதுநகர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும் பைபிளை திருடிச்சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர். இருப்பினும் சப்–கலெக்டர் அலுவலகம் எதிரே உள்ள தேவாலயத்தில் பைபிள் திருடு போன சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story