8 வழி பசுமைச்சாலை திட்டம்: 3-ம் நபர்களால் பரப்பப்படும் வீண் வதந்திகளை நம்ப வேண்டாம் கலெக்டர் தகவல்


8 வழி பசுமைச்சாலை திட்டம்: 3-ம் நபர்களால் பரப்பப்படும் வீண் வதந்திகளை நம்ப வேண்டாம் கலெக்டர் தகவல்
x
தினத்தந்தி 30 Jun 2018 5:00 AM IST (Updated: 30 Jun 2018 1:26 AM IST)
t-max-icont-min-icon

8 வழி பசுமைச்சாலை திட்டம் குறித்து 3-ம் நபர்களால் பரப்பப்படும் வீண் வதந்திகளை எந்த காரணம் கொண்டும் நம்ப வேண்டாம் என்று கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி தெரிவித்து உள்ளார்.

திருவண்ணாமலை,

8 வழி பசுமைச்சாலை திட்டம் குறித்து 3-ம் நபர்களால் பரப்பப்படும் வீண் வதந்திகளை எந்த காரணம் கொண்டும் நம்ப வேண்டாம் என்று கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி தெரிவித்து உள்ளார்.

இதுகுறித்து கலெக்டர் வெளியிட்டுள்ள செய்தி குறிப் பில் கூறியிருப்பதாவது:-

சென்னை - சேலம் பசுமை வழிச்சாலையானது தமிழ் நாட்டில் அமைய உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் ஒன்று. சென்னையில் இருந்து சேலம் செல்வதற்கு பயண தூரம் 51 கிலோ மீட்டர் குறைவாகவும், 2½ மணி நேரத்தில் செல்ல முடியும். தொழில் நகரங்களான சென்னை, சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை மற்றும் சுற்றுலா தலங்களான திருவண்ணாமலை, ஊட்டி, ஏற்காடு ஆகியவற்றை இந்த சாலை மார்க்கமாக இணைக்க பெரிதும் உதவுகிறது.

விவசாய விளை பொருட்கள் மற்றும் அத்தியாவசிய பொருட்களை பிற நகரங்களுக்கு துரிதமாக இந்த சாலை வழியாக கொண்டு செல்ல மிகவும் பயனுள்ளதாக அமையும். இந்த சாலை திட்டத்தினால் திருவண்ணா மலை மாவட்டத்தில் பல்வேறு தொழில்கள் தொடங்குவதற் கும், மாவட்டம் மிகுந்த வளர்ச்சி அடைவதற்கும் பயன்படும்.

சாலையின் இருபுறமும் உள்கட்டமைப்பு வசதிகள் வளர்ச்சி பெறுவதால் வர்த்தக பயன்பாடு அதிகரிப்பதுடன் வேலை வாய்ப்புகள் ஏற்படும். நிலங்களின் மதிப்பும் பன் மடங்கு உயரும் வாய்ப்பும் உள்ளது. மலைப்பகுதி மற்றும் வனப்பகுதி கூடுமானவரை தவிர்க்கப்பட்டு இந்த திட்டத்தின் கீழ் திருவண்ணா மலை மாவட்டத்தில் தோராய மாக 4 கிலோ மீட்டர் தூரத்திற்கு சுமார் 18 ஹெக்டேர் பரப்பு வன நிலத்தில் மட்டுமே சாலை அமைக்கப்படுகிறது.

மேலும், காட்டு விலங்கு களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையிலும், இயற்கை சூழல் பாதிப்பு ஏற்படாத வகையிலும் சாலை அமைக்கப்படுகிறது. இந்த திட்டத்தின்கீழ் கையகப்படுத் தப்பட உள்ள வன நிலங்களுக்கு ஈடாக 2 மடங்கு, அரசு நிலம் வனத்துறைக்கு வழங்கப்பட்டு வனப்பகுதியாக மாற்றம் செய்யப்படும்.

இந்த திட்டத்திற்கு குறைந்த அளவிலான மரங்களே அகற்றப்படுவதுடன், இந்த சாலையில் சுமார் 277 கிலோ மீட்டர் தூரத்திற்கு இருபுறமும் சுமார் 3 லட்சம் மரங்கள் நடவு செய்து பராமரிக்கப்பட உள்ளது. மேலும் அகற்றப்படும் ஒரு மரத்திற்கு ஈடாக 10 மரங்கள் நட்டு பராமரிக்கப்படும்.

திருவண்ணாமலை மாவட் டத்தில் உள்ள கவுத்திமலை பகுதிக்கும், பசுமை வழிச் சாலை அமைக்கப்பட உள்ள இடத்திற்கும் இடையில் சுமார் 10 கிலோ மீட்டர் தூரம் உள்ளது. கவுத்திமலை கனிமம் குறித்த மனுவும் ஏற்கனவே தள்ளுபடி செய்து முடிக்கப் பட்டுவிட்டது. எனவே, இந்த சாலை அமைக்கும் திட்டம் கவுத்திமலை பகுதியில் கிடைக்கும் கனிம வளங்களை எடுத்து செல்வதற்காக என்ற கருத்து முற்றிலும் தவறானது.

பாதசாரிகள் மற்றும் கால்நடைகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் சாலை யின் இருபுறமும் பாதுகாப்பு தடுப்புகள் அமைக்கப்படும். நில உரிமையாளர்கள், பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு தேவையான இடங்களில் சாலையின் கீழே கடந்து செல்ல பாதை மற்றும் அணுகுசாலை அமைக்கப் படும்.

இந்த திட்டத்தின்கீழ் திருவண்ணாமலை மாவட்டத் தில் கையகப்படுத்தப்பட உள்ள மொத்தம் 860 ஹெக்டேர் நிலத்தில், அரசு புறம்போக்கு நிலங்கள் 155 ஹெக்டேர், தனியார் நிலங்களில் நன்செய் நிலங்கள் 100 ஹெக்டேர், புன்செய் நிலங்கள் 605 ஹெக்டேர் மட்டுமே கையகப்படுத்தப்பட உள்ளது.

கையகப்படுத்தப்பட உள்ள நிலங்களுக்கு நிலமதிப்பிற்கு மேல் கூடுதலாக 1½ மடங்கு நிலமதிப்பு தொகையுடன், கட்டிட மதிப்பு மற்றும் பலன் தரும் மரங்களுக்கும் இழப் பீட்டு தொகை வழங்கப்பட உள்ளது. மேலும் நில விவர அறிவிப்பு வெளியிடப்பட்ட தேதியில் இருந்து தீர்ப்பு வழங்கப்படும் தேதி வரை உள்ள காலத்திற்கு 12 சதவீதம் கூடுதல் மதிப்பீட்டு தொகை கணக்கீடு செய்யப்பட்டு இழப்பீட்டு தொகையுடன் வழங்கப்படும்.

இந்த திட்டம் பொதுமக்க ளின் குறிப்பாக விவசாயிகள் வாழ்வாதாரத்தை பெரிதும் மேம்படுத்த கூடியதே. இதனால் பொதுமக்களின் எதிர்கால பொருளாதார வளர்ச்சியை கருத்தில் கொண்டு நிறைவேற்றப் படும் மிகச் சிறப்பான சீரிய திட்டம் என்பதால் அனைத்து தரப்பு பொதுமக்களும், விவசாயப் பெருமக்களும் இந்த திட்டத்திற்கு பூரண ஒத்துழைப்பு தர வேண்டும்.

இது சம்பந்தமாக பொது மக்களுக்கு ஏற்படும் சந்தேகங் கள் குறித்து, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளை எந்த நேரத்திலும் சந்தித்து, தங்களின் சந்தேகங்களை நிவர்த்தி செய்து கொள்ளலாம்.

3-ம் நபர்களால் பரப்பப் படும் வீண் வதந்திகளை எந்த காரணம் கொண்டும் நம்ப வேண்டாம். மேலும், சமூக வலைதளங்களான ‘வாட்ஸ் அப்’ மற்றும் முகநூல் ஆகியவற்றின் மூலம் வரும் தகவல்கள் உண்மையல்ல.

இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.

Next Story