கொடைக்கானலில் ஒரு மணி நேரம் பலத்த மழை நீர்வீழ்ச்சிகளில் வெள்ளப்பெருக்கு
கொடைக்கானலில் ஒரு மணி நேரம் பலத்த மழை பெய்ததால் நீர்வீழ்ச்சிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
கொடைக்கானல்,
கொடைக்கானல் பகுதியில் ஏப்ரல் மாதம் முதல் ஜூன் மாதம் முதல் வாரம் வரை அவ்வப்போது பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக நட்சத்திர ஏரி நிரம்பியது. மேலும் உபரிநீர் வெளியேறியதுடன், நகருக்கு குடிநீர் வழங்கும் அணைகளிலும் நீர் மட்டமும் வெகுவாக உயர்ந்தது. அதன்பிறகு கடந்த 10 நாட்களாக மேகமூட்டம் நிலவி வந்தது. ஆனால் மழை பெய்யவில்லை. இந்தநிலையில் நேற்று மதியம் 1 மணி முதல் சாரல் மழை பெய்தது. இதையடுத்து 2 மணி முதல் 3 மணி வரை ஒரு மணி நேரம் பலத்த மழை பெய்தது. இதையடுத்து விட்டு விட்டு சாரல் மழை பெய்து கொண்டே இருந்தது. மழை காரணமாக சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. வெள்ளி நீர்வீழ்ச்சி, பாம்பார் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. நீண்ட நாட்களுக்கு பிறகு மழை பெய்ததால் விவசாயிகளும், பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Related Tags :
Next Story