செங்கம் அருகே 8 வழி பசுமைச்சாலைக்கு எதிர்ப்பு:ரேஷன் கார்டு, வாக்காளர் அட்டைகளை வீசி எறிந்த விவசாயிகள்
செங்கம் அருகே 8 வழி பசுமைச்சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள், பெண்கள் ரேஷன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டைகளை வீசி எறிந்தனர். மேலும் அவர்கள் போராட்டத்திலும் ஈடுபட்டனர். இதனால் அதிகாரிகள் தங்கள் பணியை தற்காலிகமாக கைவிட்டு சென்றனர்.
கலசபாக்கம்,

சென்னை - சேலத்திற்கு 8 வழி பசுமைச்சாலை அமைக்கப்பட உள்ளது. இதற்காக தற்பொது போலீசார் பாதுகாப்புடன் நிலம் அளவீடு பணி நடைபெற்ற வருகிறது. இந்த சாலை அமைப்பதற்கு சில விவசாயிகள் ஆதரவு தெரிவித்தாலும், பெரும்பாலான விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு திருவண்ணாமலை மாவட்டத்தில் பசுமைச்சாலை அமைய உள்ள பகுதியில் விவசாயிகள் கருப்பு கொடி ஏற்றி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
செங்கம் ஒன்றியத்தில் நீப்பத்துரை, கட்டமடுவு, முறையாறு உள்ளிட்ட பகுதியில் பசுமைச்சாலைக்கு நிலம் அளவீடு பணி நடைபெற்றது. அந்த பணிக்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து சிலர் மண்எண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றனர். இருப்பினும் நிலம் அளவீடு பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் செங்கம் அருகே உள்ள புதுப்பாளையம் ஒன்றியத்தை சேர்ந்த ஆலத்தூர், ஓரந்தவாடி, நயம்பாடி, சி.நம்மியந்தல் ஆகிய கிராமங்களில் போலீசார் பாதுகாப்புடன் நிலம் அளவீடு பணி நடைபெற்றது.
சி.நம்மியந்தலில் பெண்கள் மற்றும் விவசாயிகள் நிலம் அளவீடு பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள், ரேஷன் கார்டுகள் மற்றும் வாக்காளர் அடையாள அட்டைகளை நிலம் அளவீடு பணிக்கு வந்த அதிகாரிகளின் முன்பு கீழே வீசி எதிர்ப்பு தெரிவித்தனர். அதைத் தொடர்ந்து அவர்களிடம் போலீசார் மற்றும் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.
முன்னதாக பெண்கள் மற்றும் விவசாயிகள் சி.நம்மியந்தல் கூட்டுரோடு பகுதியில் சாலையோரம் தரையில் அமர்ந்து கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதையடுத்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். தொடர்ந்து பதற்றமான சூழ்நிலை அந்த பகுதியில் ஏற்பட்டதால், நிலம் அளவீடு பணியை அதிகாரிகள் தற்காலிகமாக கைவிட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.

Related Tags :
Next Story