மாவட்டம் முழுவதும் 770 போலீசார் ரத்ததானம்


மாவட்டம் முழுவதும் 770 போலீசார் ரத்ததானம்
x
தினத்தந்தி 30 Jun 2018 5:05 AM IST (Updated: 30 Jun 2018 5:05 AM IST)
t-max-icont-min-icon

தேசிய தன்னார்வ ரத்ததான தினத்தை முன்னிட்டு வேலூர் மாவட்டத்தில் 770 போலீசார் ரத்ததானம் செய்தனர்.

அடுக்கம்பாறை,

தேசிய தன்னார்வ ரத்த தான தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் மற்றும் வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக்கல்லூரி ரத்த வங்கி இணைந்து போலீசாருக்கான ரத்த தான முகாமை நடத்தியது. அடுக்கம்பாறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நடந்த ரத்ததான முகாமுக்கு டீன் சாந்திமலர் தலைமை தாங்கினார்.

சுகாதார பணிகள் துணை இயக்குனர் சுரேஷ், மருத்துவக்கல்லூரி துணை முதல்வர் ஆதிகேசவன், மருத்துவமனை துணை கண்காணிப்பாளர் (பொறுப்பு) ராஜவேலு, குடியிருப்பு மருத்துவ அலுவலர் இன்பராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ரத்த மாற்றுத்துறை அலுவலர் சிவராமன் வரவேற்றார்.

முகாமில் சிறப்பு அழைப்பாளராக வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பகலவன் கலந்துகொண்டு முகாமை தொடங்கி வைத்தார். பின்னர் அவர் ரத்த தானம் செய்தார். துணை போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீதரன், எய்ட்ஸ் கட்டுப்பாட்டு திட்ட அலுவலர் ஆனந்த சித்ரா, ரத்த வங்கி அலுவலர் பாஸ்கர், பசுபதி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

இதில் 365 போலீசார் ரத்ததானம் செய்தனர்.

இதேபோன்று வாலாஜா, திருப்பத்தூர் அரசு மருத்துவமனைகளிலும், வேலூர் கோட்டைக்குள் உள்ள காவலர் பயிற்சி பள்ளியிலும் போலீசார் ரத்த தானம் செய்தனர். மாவட்டம் முழுவதும் 4 இடங்களில் நடந்த முகாமில் 770 போலீசார் ரத்த தானம் செய்தனர். 

Next Story