குடியிருப்பு கட்டிடத்தின் 8-வது மாடியில் இருந்து குதித்து சிறுமி தற்கொலை
மும்பை காந்திவிலியில் குடியிருப்பு கட்டிடத்தின் 8-வது மாடியில் இருந்து குதித்து சிறுமி தற்கொலை செய்து கொண்டாள். அவள் உயிரை மாய்த்து கொள்ள மாடியில் இருந்து குதிக்கும் வீடியோ காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மும்பை,
மும்பை மேற்கு புறநகர் காந்திவிலி தாக்கூர் வில்லேஜ் பகுதியில் கார்டேனியா கோ-ஆபரேடிவ் ஹவுசிங் சொசைட்டி என்ற அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. நேற்றுமுன்தினம் மாலை அந்த கட்டிடத்தில் இப்படி ஒரு துயர சம்பவம் நடக்கும் என யாரும் எதிர்பார்க்கவில்லை.
அந்த கட்டிடத்தின் 5-வது மாடியில் வசித்து வந்த ஹர்சிகா என்ற 14 வயது சிறுமி, 8-வது மாடிக்கு சென்று அங்குள்ள வெளிப்புற சுவரில் நின்றபடி கீழே குதிப்பதற்கு தயாராகி கொண்டிருந்தாள்.
இதை பார்த்து குடியிருப்புவாசிகள் அதிர்ச்சியில் உறைந்தனர். கீழே குதித்து விடாதே என அவளை நோக்கி சத்தம் போட்டனர். ஆனால் அதை சற்றும் பொருட்படுத்தாத அந்த சிறுமி அடுத்த சில நொடிகளிலேயே அங்கிருந்து கீழே குதித்து விட்டாள்.
வேகமாக விழுந்து தரையில் மோதியதில் அவள் படுகாயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் துடித்தாள். இதை பார்த்து பதறி போன குடியிருப்புவாசிகள் உடனடியாக அவளை மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் அவள் ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியில் உயிரிழந்தது தெரியவந்தது.
தகவல் அறிந்து வந்த போலீசார் அவளது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
தற்கொலை செய்து கொண்ட சிறுமி 9-ம் வகுப்பு படித்து வந்தது தெரியவந்தது. அவள் என்ன காரணத்திற்காக தற்கொலை செய்து கொண்டாள் என்பது தெரியவில்லை. அவளது செல்போன், சமூக வலைத்தளம் ஆகியவற்றை போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள்.
மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவளது குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் தோழிகளிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிைலயில், சிறுமி ஹர்சிகா உயிரை மாய்த்து கொள்வதற்காக மாடியில் இருந்து குதித்ததை அந்த கட்டிடத்தின் எதிர்புறம் உள்ள இன்னொரு கட்டிடத்தில் இருந்து ஒருவர் செல்போனில் படம் பிடித்து இருக்கிறார். பார்ப்போரின் நெஞ்சை பதைபதைக்க செய்யும் அந்த வீடியோ காட்சி சமூவலைதளங்களில் வேகமாக பரவி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Tags :
Next Story