பிரதமரும், கவர்னரும் புதுவை மாநில வளர்ச்சிக்கு தடையாக இருக்கிறார்கள் - நாராயணசாமி குற்றச்சாட்டு


பிரதமரும், கவர்னரும் புதுவை மாநில வளர்ச்சிக்கு தடையாக இருக்கிறார்கள் - நாராயணசாமி குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 1 July 2018 5:00 AM IST (Updated: 1 July 2018 1:57 AM IST)
t-max-icont-min-icon

பிரதமரும், கவர்னரும் நமது புதுவை மாநிலத்தின் வளர்ச்சிக்கு தடையாக உள்ளதாக முதல்–அமைச்சர் நாராயணசாமி குற்றஞ்சாட்டினார்.

பாகூர்,

புதுவை மாநிலம் மணவெளி தொகுதி இளைஞர் காங்கிரஸ் உறுப்பினர் சேர்க்கை கூட்டம் தவளக்குப்பத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு அரசு கொறடா அனந்தராமன் எம்.எல்.ஏ., தலைமை தாங்கினார். மணவெளி தொகுதி வட்டார காங்கிரஸ் தலைவர் ராமு முன்னிலை வகித்தார்.

நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக முதல்–அமைச்சர் நாராயணசாமி கலந்து கொண்டு உறுப்பினர் சேர்க்கைக்கான படிவத்தை வழங்கினார்.

நிகழ்ச்சியில் முதல்–அமைச்சர் நாராயணசாமி பேசியதாவது:–

நாட்டில் மக்கள் பிரச்சினைக்கு ஆதரவாக இளைஞர் காங்கிரஸ் அமைப்பு போராடி வருகிறது. இளைஞர் காங்கிரசில் புதுச்சேரி மாநிலத்தில்தான் அதிகப்படியான உறுப்பினர்கள் உள்ளனர். புதுவை மாநிலத்தில் உள்ள மக்கள் பிரச்சினைகளுக்கு எதிர்க்கட்சியான என்.ஆர்.காங்கிரஸ் கட்சியினர் போராடுவது கிடையாது. அதேபோல் சட்டசபை கூட்டத்திலும் பெயரளவில் பங்கேற்கிறார்கள்.

நமது மாநில வளர்ச்சிக்கு தடையாக பிரதமர் நரேந்திர மோடியும், கவர்னர் கிரண்பெடியும் இருக்கிறார்கள். நமக்கு வழங்க வேண்டிய முழு நிதியை வழங்குவதில்லை. ராகுல்காந்தி விரைவில் பிரதமராவார். பின்னர் நமக்கு தேவையான நிதி கிடைக்கும். அதன் மூலமாக மக்கள் நலத்திட்டங்கள் அனைத்தும் முறையாக செயல்படுத்தப்படும். இளைஞர்கள் மக்களுக்கு பல சேவைகள் செய்து அதிகாரத்திற்கு வர வேண்டும். அதற்கு என்றும் நான் துணையாக இருப்பேன்.

இவ்வாறு நாராயணசாமி பேசினார்.

இந்த கூட்டத்தில் காங்கிரஸ் கடசி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.


Next Story