மர்மநபர்களால் தாக்கப்பட்ட தனியார் நிறுவன காவலாளி சாவு கொலை வழக்காக மாற்றி போலீஸ் விசாரணை


மர்மநபர்களால் தாக்கப்பட்ட தனியார் நிறுவன காவலாளி சாவு கொலை வழக்காக மாற்றி போலீஸ் விசாரணை
x
தினத்தந்தி 1 July 2018 3:45 AM IST (Updated: 1 July 2018 2:45 AM IST)
t-max-icont-min-icon

செங்கிப்பட்டி அருகே மர்மநபர்களால் தாக்கப்பட்ட தனியார் நிறுவன காவலாளி இறந்தார். இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருக்காட்டுப்பள்ளி,

தஞ்சை மாவட்டம் செங்கிப்பட்டி அருகே உள்ள கீழ எல்லைக்கால் தெருவை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது58). இவர் அதே பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் இரவு காவலாளியாக பணியாற்றி வந்தார். சம்பவத்தன்று பணியில் இருந்த இவரை அடையாளம் தெரியாத நபர்கள் கட்டையால் தாக்கினர். இதில் படுகாயம் அடைந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இதுகுறித்து செங்கிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்தநிலையில் சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார். பின்னர் இந்த வழக்கை போலீசார், கொலை வழக்காக மாற்றி ராஜேந்திரனை அடித்து கொலை செய்த மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.


Next Story