ராசிபுரம் துணை போலீஸ் சூப்பிரண்டு திருவாரூருக்கு பணி இடமாற்றம் கந்துவட்டி புகார் காரணமா?


ராசிபுரம் துணை போலீஸ் சூப்பிரண்டு திருவாரூருக்கு பணி இடமாற்றம் கந்துவட்டி புகார் காரணமா?
x
தினத்தந்தி 1 July 2018 3:45 AM IST (Updated: 1 July 2018 2:49 AM IST)
t-max-icont-min-icon

ராசிபுரம் துணை போலீஸ் சூப்பிரண்டு ஈஸ்வரமூர்த்தி திருவாரூருக்கு பணி இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளார். கந்துவட்டி புகார் காரணமாக அவர் மாற்றப்பட்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

ராசிபுரம்,

நாமக்கல் மாவட்டம், ராசிபுரத்தில் கடந்த 10 மாதங்களாக துணை போலீஸ் சூப்பிரண்டாக இருப்பவர் ஈஸ்வரமூர்த்தி. இவர் திருவாரூர் மாவட்ட குற்றப்பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டாக பணி இடமாற்றம் செய்யப்பட்டார். திருச்சி சி.பி.சி.ஐ.டி. போலீஸ் துணை சூப்பிரண்டாக இருக்கும் விஜயராகவன், ராசிபுரம் துணை போலீஸ் சூப்பிரண்டாக பணி இடமாற்றம் செய்யப்பட்டார். ராசிபுரம் துணை போலீஸ் சூப்பிரண்டு ஈஸ்வரமூர்த்தி, அவருடைய மனைவி, மகன் ஆகியோர் மீது கடந்த 6 மாதங்களுக்கு முன்பு புதுப்பாளையத்தை சேர்ந்த ஒருவர் கந்துவட்டி கேட்டு கொடுமைப்படுத்துவதாக புகார் கூறி இருந்தார்.

கந்துவட்டி புகார் காரணமா?

சென்னை ஐகோர்ட்டு உத்தரவின் பேரில் துணை போலீஸ் சூப்பிரண்டு ஈஸ்வரமூர்த்தி, அவரது மனைவி, மகன் ஆகிய 3 பேர் மீதும் நாமக்கல் மாவட்ட குற்றப் பிரிவு போலீசில் வழக்குபதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த கந்துவட்டி புகார் காரணமாக அவர் பணி இடமாற்றம் செய்யப்பட்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது. 

Next Story