இலக்கியத்தை வரலாற்றோடு பொருத்தி பார்க்கக்கூடாது தர்மபுரியில் தமிழருவி மணியன் பேச்சு


இலக்கியத்தை வரலாற்றோடு பொருத்தி பார்க்கக்கூடாது தர்மபுரியில் தமிழருவி மணியன் பேச்சு
x
தினத்தந்தி 1 July 2018 4:00 AM IST (Updated: 1 July 2018 2:50 AM IST)
t-max-icont-min-icon

ராமாயண ரகசியம் என்ற தலைப்பில் சிறப்பு சொற்பொழிவு தர்மபுரி டி.என்.சி. விஜய் மகாலில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு அமைப்பின் தலைவர் டி.என்.சி.மணிவண்ணன் தலைமை தாங்கினார்.

தர்மபுரி,

ராமாயண ரகசியம் என்ற தலைப்பில் சிறப்பு சொற்பொழிவு தர்மபுரி டி.என்.சி. விஜய் மகாலில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு அமைப்பின் தலைவர் டி.என்.சி.மணிவண்ணன் தலைமை தாங்கினார். பொருளாளர் ஜெ.பி.நாகராஜன், தொழில் அதிபர் டி.என்.சி.இளங்கோவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். செயலாளர் சஞ்சீவராயன் வரவேற்று பேசினார். நிகழ்ச்சியில் காந்திய மக்கள் இயக்கத்தின் தலைவர் தமிழருவி மணியன் கலந்து கொண்டு பேசியதாவது:-

இதிகாசங்கள் நமது வாழ்க்கையை செழுமைப்படுத்துகின்றன. இந்திய மண் பெருமைப்படும் வகையில் நமக்கு ராமாயணமும், மகாபாரதமும் கிடைத்து உள்ளன. ராமாயணம் இதயம் போன்றது. மகாபாராதம் மூளையை போன்றது. உலகத்தில் உள்ள அனைத்து இலக்கியங்களையும் படித்த பின்னர் கம்பராமாயணத்தை படித்தால் கம்பனின் படைப்பாற்றல் குறித்து தெரியவரும். கம்ப ராமாயணத்தில் திருக்குறள் சார்ந்த 700 கருத்துக்களை காணமுடிகிறது. வரலாறு வேறு, இலக்கியம் வேறு. இலக்கியங்களை வரலாற்றோடு பொருத்தி பார்க்ககூடாது.

இவ்வாறு அவர் பேசினார். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான தமிழ் ஆர்வலர்கள், முக்கிய பிரமுகர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை ஆன்மிகத்தில் ஆனந்தம் அமைப்பினர் செய்திருந்தனர். 

Next Story