தனியார் ரப்பர் கம்பெனியில் பயங்கர தீ விபத்து பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசம்


தனியார் ரப்பர் கம்பெனியில் பயங்கர தீ விபத்து பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசம்
x
தினத்தந்தி 1 July 2018 4:30 AM IST (Updated: 1 July 2018 2:50 AM IST)
t-max-icont-min-icon

ஓசூர் அருகே தனியார் ரப்பர் கம்பெனியில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசம் ஆனது.

மத்திகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை அடுத்த கர்ணூர் பக்கமுள்ள பொம்மாண்டப்பள்ளி செல்லும் சாலையோரம் தனியார் ரப்பர் கம்பெனி உள்ளது. இந்த கம்பெனியில் இருந்து நேற்று மாலை, 5 மணிக்கு திடீரென கரும்புகை வெளியேறியது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள் மற்றும் அருகில் உள்ள கம்பெனி தொழிலாளர்கள், ஓசூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைக்க முயன்றனர். ஆனாலும் தீ கொழுந்து விட்டு எரிந்ததால் அவர்களால் கட்டுப்படுத்த முடியவில்லை. இதையடுத்து தேன்கனிக்கோட்டையில் இருந்து மற்றொரு தீயணைப்பு வாகனம் வரவழைக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து தீயணைப்பு படை வீரர்கள் நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர்.

இந்த தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசம் ஆனது. தீ விபத்தின் சேத மதிப்பு கணக்கிடப்பட்டு வருவதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. தீ விபத்துக்கான காரணம் குறித்து மத்திகிரி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த தீவிபத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 

Next Story