மணல் தட்டுப்பாட்டால் கட்டிட பணிகள் பாதிப்பு மாட்டு வண்டியில் மணல் அள்ள கோரிக்கை
தா.பழூர் பகுதியில் மணல் பற்றாக்குறையால் கட்டிட பணிகள் நின்று பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் கொள்ளிடம் ஆற்றில் மாட்டு வண்டியில் மணல் அள்ளுவதற்கு ஏதுவாக குவாரி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திற்கு தா.பழூர் பகுதி விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
தா.பழூர்,
அரியலூர் மாவட்டம் தா.பழூர், திருமானூர் ஆகிய பகுதிகள் டெல்டா பகுதியாகும். இரு பகுதிகளிலும் கொள்ளிடம் ஆறு ஓடுகிறது. ஆற்றை ஒட்டி 50-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. தா.பழூர் மற்றும் திருமானூர் பகுதியில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அரசின் சார்பில் மணல் குவாரி அமைக்கப்பட்டு தனியார் ஏஜென்ட் மூலம் மணல் வினியோகம் செய்யப்பட்டு வந்தது. அதன்பின்னர் கொள்ளிடம் ஆற்றில் டிப்பர் லாரிகள் மூலம் வரம்பு மீறி மணல் எடுக்கப்பட்டதால், நிலத்தடி நீர் பாதிக்கப்படுவதாக கூறி விவசாயிகள் மத்தியில் பலத்த எதிர்ப்பு கிளம்பி பல இடங்களில் போராட்டங்கள் நடத்தினர். இதனால் மணல் குவாரி நிறுத்தப்பட்டது. அதன்பின்னர் இடைத்தரகர் குறுக்கீடு இல்லாமல் அரசே முழுவதும் ஏற்று அரசு விதிமுறைகள் படி நடத்தும் என்று தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்ததை தொடர்ந்து, தமிழகத்தில் பல இடங்களில் மணல் குவாரி தொடங்கப்பட்டது. அதற்கும் விவசாயிகள் மத்தியில் பலத்த எதிர்ப்பு கிளம்பியது. மேலும் மணல் குவாரி தொடர்பாக நீதிமன்ற தடை ஆணை பிறப்பித்து இருந்ததால், தா.பழூர் பகுதியில் மணல் குவாரிகள் அறவே இயங்கவில்லை.
பொதுவாக கட்டிட பணிகளுக்கு மணல் தேவை என்பது மிகவும் இன்றியமையாததாகும். கட்டிட சாரம் எழுப்புவதற்கு, சிமெண்டோடு மணல் சேர்ந்த கலவை கட்டிடத்திற்கு உறுதி தரும் என்பதால் ஆற்று மணலுக்கு மிகுந்த முக்கியத்துவம் தரப்படுகிறது. இப்படி கட்டிடப்பணிகளுக்கு முக்கிய அரணாக விளங்கும் ஆற்று மணல் இன்றைக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு காரணமாக தா.பழூர் பகுதியில் அரசு உள்ளிட்ட அனைத்து கட்டிட பணிகளும் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளன.
மேலும் இத்தொழிலை நம்பியுள்ள 300-க்கும் மேற்பட்ட கட்டிட தொழிலாளர் குடும்பத்தினர் வேலையின்றி சிரமப்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனவே நீர் ஆதாரத்தை பாதிக்கா வண்ணம் தா.பழூர் பகுதியை ஒட்டியுள்ள அண்ணகாரன்பேட்டை, வாழைக்குறிச்சி ஆகிய பகுதிகளில் ஏதாவது ஓர் இடத்தை தேர்வு செய்து மாட்டுவண்டிக்கு என்று மணல் குவாரி அமைத்தால், கட்டிட பணிகளுக்கு பாதிப்பு இருக்காது. மேலும் வெளி வட்டாரத்தில் அதிக விலை கொடுத்து வாங்க வேண்டிய அவசியமும் இருக்காது. இதுகுறித்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு தா.பழூர் பகுதி விவசாயிகள் மாவட்ட கலெக்டரை சந்தித்து மாட்டு வண்டிக்கு என்று குவாரி அமைக்க மனுஒன்று அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இதுகுறித்து தா.பழூரை சேர்ந்த கட்டிட கலைஞர் முருகன் கூறுகையில், தா.பழூர் பகுதியில் மணல் தட்டுப்பாட்டால் கட்டிட பணிகள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. தா.பழூர் பகுதியில் மணல் குவாரி நிறுத்தப்பட்டபிறகு, இங்குள்ள மாட்டு வண்டி தொழிலாளர்கள், தஞ்சை மாவட்டம் நீலத்தநல்லூரை ஒட்டியுள்ள கொள்ளிடம் ஆற்றில் இயங்கி வரும் அரசு மாட்டுவண்டி குவாரியில் மணல் அள்ளி வந்தனர். அப்போது மணல் தட்டுப்பாடு இருந்தாலும், கட்டிட பணிகள் அந்தஅளவிற்கு பாதிக்கப்படவில்லை. அதன்பின்னர் அந்த பகுதி விவசாயிகள், இங்குள்ள விவசாயிகளுக்கு மணல் அள்ளுவதற்கு எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து, அங்கும் மணல் எடுக்க முடியவில்லை. எனவே நிலத்தடி நீர் பாதிக்காத வண்ணம், மாட்டு வண்டிக்கு மட்டும் மணல் அள்ள அனுமதி அளித்தால் இதை நம்பி வாழ்கின்ற கட்டிட தொழிலாளர்கள் வாழ்க்கையும் பிரகாசமாக இருக்கும் என்றார்.

Related Tags :
Next Story