மும்பையில் விமான போக்குவரத்தின் பாதுகாப்பு குறித்து ஆராய வேண்டும்


மும்பையில் விமான போக்குவரத்தின் பாதுகாப்பு குறித்து ஆராய வேண்டும்
x
தினத்தந்தி 1 July 2018 3:45 AM IST (Updated: 1 July 2018 3:20 AM IST)
t-max-icont-min-icon

மும்பையில் விமான போக்குவரத்தின் பாதுகாப்பு தொடர்பாக ஆராய சிவசேனா கட்சி வலியுறுத்தியுள்ளது.

மும்பை,

மும்பை ஜூகு விமான தளத்தில் இருந்து புறப்பட்ட தனியார் விமானம் ஒன்று நடுவானில் ஏற்பட்ட கோளாறு காரணமாக மும்பை காட்கோபரில் உள்ள கட்டுமான கட்டிடத்தில் விழுந்து நொறுங்கியது. இந்த கோர விபத்தில் 5 பேர் பலியானார்கள்.

நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த விமான விபத்து தொடர்பாக சிவசேனா கட்சி தனது அதிகாரப்பூர்வ பத்திரிகையான ‘சாம்னாவில்’ கூறியிருப்பதாவது:-

காட்கோபர் விமான விபத்து ஒரு எச்சரிக்கையாகவே கருதப்பட வேண்டும். இதனால் மும்பை நகரின் நிலப்பரப்பு, உயர்ந்துவரும் மக்கள்தொகை, உயரமான கட்டிடங்கள் ஆகியவற்றை கவனத்தில் கொண்டு மும்பை வான்வெளியில் விமான போக்குவரத்து மற்றும் அவற்றின் பாதுகாப்பு தொடர்பாக ஆராயப்பட வேண்டும்.

விபத்துகளை 100 சதவீதம் யாராலும் தடுக்க முடியாது. ஆனால் அவற்றை தவிர்ப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வது நமது கைகளில்தான் உள்ளது. சம்பந்தப்பட்ட நிறுவனம் விமானத்தின் பழுதை முதலிலேயே கண்டறிந்து செயல்பட்டு இருந்தால் விபத்தை தவிர்த்து இருக்கலாம்.

விமானத்தின் மோசமான நிலைமை குறித்து தெரிந்தும் சோதனை ஓட்டத்தை தொடருமாறு விமானிகள் கட்டாயப்படுத்தப்பட்டதாக பலியானோரின் குடும்பத்தினர் குற்றம்சாட்டி உள்ளனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது. 

Next Story